Published:Updated:

கடுவன், காளிங்கன், அகவை; வனத்துறை குற்றங்களைத் தடுக்க களமிறங்கும் நாட்டு நாய் படை!

நாட்டு நாய்கள்
நாட்டு நாய்கள்

``கஞ்சா பயிரிடுதல், சந்தன மரம் வெட்டுதல் போன்ற வனக்குற்றங்களை தடுக்க நாட்டு நாய்களை பயன்படுத்த உள்ளோம். மேலும், அந்த நாய்களுக்கு அழகிய தமிழ் பெயர்களை வைத்துள்ளோம்".

காவல்துறையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க, பயிற்சி பெற்ற நாய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால் தான், அதன் பணி காலத்துக்கு பிறகும், பென்ஷன் போன்றவை வழங்கியும், இறந்த பிறகும் கூட ராஜ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகின்றன.

கோவை வனத்துறை
கோவை வனத்துறை

இதேபோல, ஒரு காலத்தில், வனப்பகுதியில் நடக்கும் குற்றங்களை கண்டறியவும் பயிற்சி பெற்ற நாய்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. நாளடைவில் அது செயலற்று போனது. இந்நிலையில், கோவை வனத்துறையில் மீண்டும் பயிற்சி பெற்ற நாய்களை பயன்படுத்த திட்டமிட்டனர்.

ஆனால் ஜெர்மன் செப்பர்டு, டால்மேஷன், டாபர் மேன் போன்ற வெளிநாட்டு நாய் வகைகளை வனத்துறை தேர்ந்தெடுக்கவில்லை. நம் மண்ணின் மைந்தனர்களான சிப்பிப்பாறை, கோம்பை போன்ற நாட்டு வேட்டை நாய்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.

கோவை வனப்பகுதி
கோவை வனப்பகுதி

அதன்படி, கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு ஒரு நாய், ஆழியார் வனக்கோட்டம், கூடலூர் மற்றும் நீலகிரிக்கு தலா ஒரு நாயும் என்று மொத்தம் நான்கு சிப்பிப்பாறை நாட்டு நாய்களை வனத்துறையில் இணைத்துள்ளனர். இந்த நாட்டு நாய்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி செந்தில் கூறுகையில், ``கஞ்சா பயிரிடுதல், சந்தன மரம் வெட்டுதல் போன்ற வனக்குற்றங்களை தடுக்க நாட்டு நாய்களை பயன்படுத்த உள்ளோம். மேலும், அந்த நாய்களுக்கு அழகிய தமிழ் பெயர்களை வைத்துள்ளோம். கோவையில் உள்ள நாய்க்கு வலவன் என்ற பெயர் வைத்துள்ளோம்.

கோவை வனத்துறை
கோவை வனத்துறை

வலவன் என்றால் வலது கரம் போன்றவன் துணிச்சலானவன், நம்பிக்கையானவன் என்று பொருள், அதேபோல், மற்ற பகுதியில் உள்ள நாய்களுக்கு கடுவன், காளிங்கன், அகவை என தமிழ் பெயர்கள் சூட்டியுள்ளோம். இதற்கு தனித்தனியாக பயிற்சியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு