Published:Updated:

`உடைந்த நிலையில் ஏ.டி.எம் கதவு கண்ணாடி!' -குன்னூர் தீயணைப்பு வீரருக்கு அதிர்ச்சி கொடுத்த பாம்பு

snake rescue
snake rescue

சாக்குப் பையில் பாம்பைப் போடுவதற்கான ஏற்பாட்டைச் செய்கையில் அந்தப் பாம்பு மீட்டவரின் மணிக்கட்டை இறுக்கமாக சுற்றிப் பிணைத்து திக்குமுக்காடச்செய்தது.

கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் மக்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு வந்தாலும் வன விலங்குகள் சற்று சுதந்திரமாக உலவி வருகின்றன.

snake rescue
snake rescue

வனப்பகுதிகள் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் யானை, கரடி, காட்டுமாடு, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளை பகல் நேரங்களிலேயே குடியிருப்புப் பகுதிகளை ஒட்டிக் காணமுடிகிறது.

`வயநாட்டிலிருந்து மது வாங்கிச் சென்ற நபர்; மூடப்பட்ட 3 டாஸ்மாக் கடைகள்!' - அச்சத்தில் நீலகிரி

இந்த நிலையில், குன்னூர் சிம்ஸ்பார்க் அருகில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்கச்சென்ற வாடிக்கையாளர் ஒருவர் உள்ளே பாம்பு ஒன்று படுத்திருப்பதைப் பார்த்து அலறியடித்து வெளியே ஓடிவந்துள்ளார்.

snake rescue
snake rescue

அருகில் இருந்தவர்கள் வனத்துறை மற்றும் தீயணைப்பு மீட்புத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக வந்த மீட்பு வீரர்கள் ஏ.டி.எம் மையத்துக்குள் பதுங்கியிருந்த பாம்பை மீட்டு வெளியே கொண்டுவந்தனர்.

பாம்பைக் காண மக்கள் கூட்டமாகக் கூடிவிட்டனர். சாக்குப்பையில் பாம்பைப் போடுவதற்கான ஏற்பாட்டைச் செய்கையில் அந்தப் பாம்பு மீட்டவரின் மணிக்கட்டை இறுக்கமாக சுற்றிப் பிணைத்து திக்குமுக்காடச்செய்து அவரை தீண்டத் தயாரானது. இதனால் மிரண்டுபோன மீட்பு வீரர் சில நிமிடங்கள் போராடி சக வீரரின் உதவியுடன் கையைச்சுற்றிய பாம்பின் இறுக்கத்தை தளர்த்தினார்.

snake rescue
snake rescue

இதுகுறித்து மீட்பு வீரர்கள் கூறுகையில், ``கனரா வங்கியின் ஏ.டி.எம் கதவு கண்ணாடி உடைந்த நிலையில் இருப்பதால் பாம்பு உள்ளே புகுந்துள்ளது. 5 அடி நீளமுள்ள பாம்பை மீட்ட வனக்காவலர்கள், அருகில் உள்ள சரவணமலை வனப்பகுதிக்குள் விட்டனர்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு