Published:Updated:

கொரோனா நெகட்டிவ் என டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாய்!- 2வது நாளில் பலியான சோகம்

கொரோனா
கொரோனா

நாயின் உரிமையாளர் பிரேதப் பரிசோதனை (autopsy) செய்ய அனுமதிக்காததால், கொரோனா வைரஸ் பாதிப்பால்தான் அது இறந்ததா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

ஹாங்காங்கில் 17 வயது பொமேரேனியன் வகை நாய்க்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிசெய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. அதன் வளர்ப்பாளரான 60 வயது பெண்மணியிடம் இருந்துதான் அதுக்குப் பரவியிருக்கக்கூடும் எனப் பேசப்பட்டது. இந்நிலையில், கொரோனா நெகட்டிவ் என உறுதிசெய்யப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட இரண்டாவது நாளில், அந்த நாய் இறந்துவிட்டது. இதுதான் உலகில் கொரோனா வைரஸ் தொற்றால் முதன்முதலில் பாதிக்கப்பட்ட விலங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

dog
dog
Representational image

நாயின் உரிமையாளர் பிரேதப் பரிசோதனை (autopsy) செய்ய அனுமதிக்காததால், கொரோனா வைரஸ் பாதிப்பால்தான் அது இறந்ததா என்பது உறுதியாகத் தெரியவில்லை. கொரோனா பாதிக்கப்பட்டவுடன், மனிதர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள்போல நாய்க்கு எந்த உடல் உபாதையும் ஏற்படவில்லை. வயதான நாய் என்பதாலும், தனிமைப்படுத்தப்பட்டுவிட்டதால் அச்சத்திலிருந்ததாலும்கூட அந்நாய் டிஸ்சார்ஜுக்குப் பின் இறந்திருக்கலாம் என்று பேசப்படுகிறது.

இந்நிலையில், உலக சுகாதார நிறுவனம் தனது அறிக்கை ஒன்றில், 'கோவிட் - 19 பாதிக்கப்பட்ட நபர், இருமும்போதோ தும்மும்போதோ, பேசும்போதோ வெளிப்படும் நீர்த்துளிகள் மூலம் பிறருக்குப் பரவுகிறது. ஹாங்காங்கில், ஒரு நாய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தபோதும், நாய், பூனை அல்லது வேறு எந்த விலங்கும் கோவிட் - 19ஐ பரப்பியதற்கான ஆதாரம் இல்லை. எனினும், செல்லப் பிராணிகள் வைத்திருப்பவர்கள் தங்களைப் பாதுகாத்து, அடிக்கடி கைகளைச் சுத்தம் செய்யவும்' என்று குறிப்பிட்டிருந்தது.

dog
dog
Representational image

வளர்ப்பு விலங்குகள், கால்நடைகள் வளர்ப்பவர்கள், அவற்றுடன் நேரடித் தொடர்பை தற்போதைய சூழலில் தவிர்ப்பது, தொற்று நம்மிடமிருந்து அதற்கோ, அதனிடமிருந்து நமக்கோ பரவாமல் தவிர்க்கும்.

அடுத்த கட்டுரைக்கு