Published:Updated:

`எங்களைப் பார்த்து குரைத்ததால் கொன்றோம்': தெருநாயை அடித்துக் கொன்ற கல்லூரி மாணவர்கள்!

நாய் ( மாதிரிப்படம் )

டெல்லியில், தெருநாயை மாணவர்கள் சிலர் சேர்ந்து கொடூரமாக அடித்துக் கொன்ற வீடியோ, சமூகவலைதளத்தில் வைரலாகி இருக்கிறது. இதனிடையே, நாயைக் கொன்ற நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

`எங்களைப் பார்த்து குரைத்ததால் கொன்றோம்': தெருநாயை அடித்துக் கொன்ற கல்லூரி மாணவர்கள்!

டெல்லியில், தெருநாயை மாணவர்கள் சிலர் சேர்ந்து கொடூரமாக அடித்துக் கொன்ற வீடியோ, சமூகவலைதளத்தில் வைரலாகி இருக்கிறது. இதனிடையே, நாயைக் கொன்ற நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Published:Updated:
நாய் ( மாதிரிப்படம் )

தெரு நாய்களுக்கு எதிரான வன்முறை மெட்ரோ நகரங்களில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் கர்ப்பமான தெரு நாய் ஒன்றை மாணவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து கொடூரமாக அடித்துள்ளனர். டெல்லியில் உள்ள நியு பிரன்ஸ் காலனியில் இந்த நம்பவம் நடந்தது.

மாணவர்கள் சேர்ந்து அப்பகுதியில் நின்றிருந்த கர்ப்பமான தெரு நாயை அங்கு இருந்த சிறிய குடிலுக்குக் கொண்டு சென்று கல்லாலும் கம்பாலும் கொடூரமாக அடித்து உதைத்தனர். நாய் சத்தம் போட்டு அலறியது. மாணவர்களில் சிலர், `விடாதே கொலை செய்’ என்று கத்தும் சத்தமும் கேட்டது. நாயை அடித்து கொன்ற அவர்கள், அதை அங்குள்ள ஒரு இடத்தில் தூக்கிப்போட்டுவிட்டு சென்றுவிட்டனர். இந்த நிகழ்வுகளை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அது வைரலாகப் பரவி வருகிறது.

நாயை கொன்ற மாணவர்கள்
நாயை கொன்ற மாணவர்கள்

நாயை அழைத்து சென்றதை அப்பகுதி மக்கள் ஏற்கனவே பார்த்திருந்தனர். மாணவர்கள் அதனை அடித்து கொலை செய்ததை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் மர்ம நபர்கள் மீது நாயை அடித்துக் கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி பாண்டே கூறுகையில், ``நாயை மாணவர்கள் சிலர் அடிப்பதாக எங்களுக்கு பெண் ஒருவர் புகார் செய்தார். மாணவர்கள் நாயை அடிக்கும் வீடியோவும் எங்களுக்கு கிடைத்திருக்கிறது. அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்” என்றார். டெல்லி டொன்போஸ்கோ கல்லூரி மாணவர்கள் 20 பேர் சேர்ந்து, ஹாக்கி மட்டையால் நாயை அடித்துக் கொலை செய்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து நாயை அடித்து கொலை செய்த கல்லூரி மாணவர்கள் நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரித்தபோது `எங்களைப் பார்த்து குரைத்ததால் பயத்தில் இக்காரித்தை செய்தோம்’ என்று கூறினர். நாயை அடித்து கொலை செய்த சம்பவத்துக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.