Published:Updated:

தாமதமாகத் தொடங்கியுள்ள யானைகள் வலசை சீஸன்... காரணம் என்ன? 

ஐஷ்வர்யா

பருவநிலை மாறிவிட்டது, மழையும் தாமதமாகிவிட்டது. அதனால் இந்த வருடம் தாமதமாகவே வலசை தொடங்கியிருக்கிறது.

Elephants
Elephants

பருவமாற்றம் ஏற்படும் காலங்களில், காடுகளில் வாழும் உயிரினங்களின் வலசை சீஸனும் தொடங்கும். அந்த வகையில், யானைகள் தற்போது ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு வலசை செல்வது தொடங்கியிருக்கிறது.

Elephant
Elephant

ஆனால், எப்போதும் ஆகஸ்ட் மாத தொடக்கத்திலேயே தொடங்கிவிடும் யானைகளின் வலசை, இந்தமுறை தாமதமாகத் தொடங்கியிருப்பதாக வன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து திண்டுக்கல் சரக வன அதிகாரி பால்ராஜ் கூறுகையில், “யானைகளின் வலசை என்பது மலைவிட்டு மலை கடந்து நகர்வதாக இருக்கும். மழைக் காலத்தில்தான் யானைகள் வலசை போகும். ஆனால், பருவநிலை மாறிவிட்டது, மழையும் தாமதமாகிவிட்டது. அதனால் இந்த வருடம் தாமதமாகவே வலசை தொடங்கியிருக்கிறது.

மேலும், கேரளா போன்ற பகுதிகளில், கடந்த வருடமும் இந்த வருடமும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டதால், யானைகளுடைய நகர்தல் என்பது தாமதமானது. ஓசூர் கெளவரப் பள்ளி அணை அருகே, சுமார் 10,000 யானைகள் வரை ஒன்றுகூடும் என்கிற கணக்கீடு உண்டு.

Elephant
Elephant
தி.விஜய்

டிசம்பர் மாத தொடக்கத்தில், அவை அத்தனையும் தங்களுடைய இடங்களுக்குத் திரும்பிவிடும். ஆனால், இந்த வருடம் மழை தாமதம் காரணமாக செப்டம்பர் மாத தொடக்கத்தில்தான் வலசையே தொடங்கியிருக்கிறது” என்றார்.