Published:Updated:

`மக்னாவுடன் சண்டையிட்டு இறந்திருக்கலாம்?!' - இறந்த யானையால் குழம்பும் வனத்துறை

elephant death
elephant death

முதுமலை புலிகள் காப்பகத்தில் மாயாற்றில் விழுந்து கிடந்த ஆண் காட்டு யானைக்கு கும்கிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது.

முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டலம், சிங்காரா வனச்சரகத்துக்குட்பட்ட நார்த்தன்ஹே வேட்டை தடுப்பு முகாவேட்டை தடுப்பு முகாமில் இருந்து வனத்துறை குழு ஒன்று கடந்த 4-ம் தேதி வழக்கமான மாலை நேர ரோந்து பணியைத் தொடங்க தயாராகிக் கிளம்பினர்.

elephant death
elephant death

முகாமில் இருந்து சுமார் நூறடி தொலைவில் உள்ள மாயாற்றின் கரையில் வழக்கததுக்கு மாறாக ஒரு யானை படுத்திருப்பதை பார்த்துள்ளனர். மெதுவாக யானையின் அருகில் சென்று பார்த்தபோது அப்படியே இருந்துள்ளது. மேலும் யானையின் அருகில் சென்றுள்ளனர். யானை எழுந்திருக்க முடியாமல் கை கால்களை அசைத்தபடி இருந்துள்ளது. யானைக்கு ஏதோ உடல்நலக்கோளாறு இருப்பதை அறிந்த அந்தக்குழு உடனே தங்கள் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

சிங்காரா வனச்சரகர் காந்தன் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் மசினகுடி உதவி கால்நடை மருத்துவர் கோசலன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று யானையைப் பார்வையிட்டனர். யானைக்கு உடலநலத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தனர்.

elephant death
elephant death

உடனடியாகத் தெப்பகாட்டில் இருந்து 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு மாயாற்றில் விழுந்து கிடந்த காட்டு யானையை மேற்பகுதிக்கு கொண்டுவந்தனர். பின்னர் சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி அந்த யானை நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்தது.

முதுமலை கள இயக்குநர் கிருஷ்ணகுமார் கவுசல் இறந்த யானையின் உடலைப் பார்வையிட்ட பின்னர், பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

elephant death
elephant death

யானை இறப்பு குறித்து வனத்துறையினர் பேசுகையில், ``இறந்த ஆண் யானைக்கு சுமார் 30 வயது இருக்கலாம். தண்ணீர் குடிக்க வந்த இடத்தில் மக்னா [தந்தமற்ற ஆண் யானை] தாக்கியதில் உடலுக்குள் ரத்தக்கசிவு ஏற்பட்டு இறந்திருக்கலாம். அல்லது உடல் நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம். பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே யானை இறந்ததற்கான முழு காரணமும் தெரியவரும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு