Published:Updated:

மரத்தின் மீது முன்னங்கால்களை ஊன்றி பலாப்பழம் பறிக்கும் யானை |#ViralVideo

பலாப் பழத்தைப் பறிக்கும் யானை ( Supriya Sahu IAS Twitter )

`எனக்கும் பசிக்கும்ல' என, பசியில் சுற்றித் திரிந்த யானை ஒன்று நெடிய வளர்ந்த பலா மரத்தில் பழத்தைப் பறிக்க முயல்கிறது. அதை வேடிக்கை பார்க்கும் மக்கள், யானைக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஆரவாரங்களை எழுப்புகின்றனர். கடைசியில் என்ன ஆனது தெரியுமா?

`என்னடா இது மதுரைக்காரனுக்கு வந்த சோதனை' என்று, `ரஜினி முருகன்’ படத்தில் வாழைத்தாரில் இருந்து ஒரு வாழைப் பழத்தை இழுக்க சிரமப்படும் ஒருவரின் நகைச்சுவை காட்சி இடம் பெற்றிருக்கும். அதே பாணியில் யானை ஒன்று, பலாப் பழத்தை மரத்தில் இருந்து இழுக்கும் காட்சி வைரலாகி வருகிறது.

மரத்தின் மீது முன்னங்கால்களை ஊன்றி பலாப்பழம் பறிக்கும் யானை |#ViralVideo
supriya sahu IAS twitter

`எனக்கும் பசிக்கும்ல' என பசியில் சுற்றித் திரிந்த யானை ஒன்று நெடிய வளர்ந்த பலா மரத்தில் முதலில் தன் தும்பிக்கையை நீட்டி பலாப் பழத்தைப் பறிக்க முயல்கிறது. ஆனால், அதைத் தொட முடியாமல் போகவே, இன்னும் சற்று எக்கி தன் முன்னங்கால்கள் இரண்டையும் மரத்தின் மீது ஊன்றி, பழத்தை தும்பிக்கையால் வெற்றிகரமாகப் பறித்துவிட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

யானையின் இந்தப் பழம் பறிக்கும் முயற்சியின்போது, அதை வேடிக்கை பார்க்கும் மக்கள் யானைக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஆரவாரங்களை எழுப்புகின்றனர்.

இந்த வீடியோவை சுப்ரியா சாஹு ஐ.ஏ.எஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவை போஸ்ட் செய்த சில நிமிடங்களிலேயே பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவுக்கு பலரும் கமென்ட்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.