Published:Updated:

இரண்டு ஆண்டுகளாக காயத்துடன் சுற்றிவந்த காட்டு யானை; முதுமலையில் சிகிச்சைப் பலனின்றி பலி!

சில்வர் மான்ஸ்ட்ரா
சில்வர் மான்ஸ்ட்ரா

தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை இந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம் மேல் கூடலூர், கோக்கால், சில்வர் கிளவுட் தேயிலைத் தோட்டம் ஆகிய பகுதிகளில் சில்வர் மான்ஸ்ட்ரா என்ற ஆண் காட்டுயானை ஒன்று கடந்த 2 ஆண்டுகளுக்கும்‌ மேலாக கடுமையான காயத்துடன் வலம் வந்தது. பழங்களில் மருந்து மாத்திரைகளைக் கொடுத்த காயத்தை குணமாக்கும்‌ முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இருப்பினும் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் நாளுக்குநாள் பாதிப்பு அதிகரித்த வண்ணமே இருந்தது. இரண்டு ஆண்டுகளில் இந்த காயம் மேலும் அதிகமாகி புண்ணில் புழுக்கள் காணப்பட்டன.

சில்வர் மான்ஸ்ட்ரா
சில்வர் மான்ஸ்ட்ரா

இந்த யானையைப் பிடித்து முதுமலைக்கு கொண்டுச் சென்று சிகிச்சை அளிக்க முடிவு செய்த வனத்துறையினர், நீண்ட போராட்டத்துக்குப்பின் மயக்க ஊசி செலுத்தாமலேயே கும்கி யானைகளின் உதவியோடு கடந்த ஜூன் 16-ம்‌ தேதி இந்த யானையைப் பிடித்து 17-ம் தேதி முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட அபயரண்யம் பகுதியில் க்ரால் எனப்படும் பிரத்யேக மரக்கூண்டில் அடைத்து சிகிச்சையைத் துவக்கினர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை இந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது.

இந்த யானையின் இறப்புக்கான‌ காரணம் குறித்து முதுமலை அதிகாரிகள், ``மரக்கூண்டில் வைத்து கடந்த 20 நாள்களுக்கும் மேலாக தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தோம். காயம் குணமடைந்து வந்தது. ஆனாலும், கால்களில் வீக்கம் அதிகமாக இருந்தது.

சில்வர் மான்ஸ்ட்ரா
சில்வர் மான்ஸ்ட்ரா
2 ஆண்டுகளுக்குப் பின் பிடிபட்ட `சில்வர் மான்ஸ்ட்ரா' யானை; சிகிச்சையைத் தொடங்கிய வனத்துறை!

அவ்வப்போது காய்ச்சலும் ஏற்பட்டது. நன்றாகவே உணவு உட்கொண்டது. நேற்று காலையிலிருந்தே பலவீனமாக இருந்தது. நேற்று மாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது. இன்று உடற்கூறாய்வு மேற்கொள்ளவுள்ளோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு