தண்ணீரையும் உணவையும் தேடி, காடுகளை விட்டு வெளியே வரும் யானைகள் மின்சாரம் பாய்ச்சப்பட்டுக் கொல்லப்படும் கொடூரம் வேலூர் மாவட்டத்தில் அதிகரித்திருப்பது வன உயிரின ஆர்வலர்களைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

“வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை அடுத்து ஆந்திர எல்லைக்குட்பட்ட வனப் பகுதியில், ‘கௌண்டன்ய யானைகள் சரணாலயம்’ அமைந்திருக்கிறது. அங்கிருந்து தமிழக எல்லையோரம் உள்ள மோர்தானா அணை, சைன குண்டா, தனகொண்ட பள்ளி, கொட்ட மிட்டா உள்ளிட்ட வனப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் தேடி வரும் யானைகள், சட்ட விரோதமாக விவசாயிகள் அமைத்துள்ள மின்வேலியில் சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்துகொண்டிருக்கின்றன” என்று கண்ணீர் வடிக்கின்றனர் வன உயிரின ஆர்வலர்கள்.

கடந்த டிசம்பர் 31-ம் தேதி, குடியாத்தத்தை அடுத்த காவலேரி குட்டைப் பகுதியில் மின்வேலியில் சிக்கி ஓர் ஆண் யானை துடிதுடித்து இறந்தது. ஜனவரி மாதம் 21-ம் தேதி, பங்காரு பாளையம் மேற்கு வனச் சரகம் மொகிலி கோயில் அருகில் ஒற்றைக் கொம்புடைய ஆண் யானை மின்சாரம் தாக்கி இறந்தது. இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் மார்ச் 1-ம் தேதி, மோடி குப்பம் ஊராட்சி மத்தேட்டிப் பள்ளி கிராமத்தில் பிச்சாண்டி என்பவரின் நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி ஓர் ஆண் யானை உயிரிழந்தது. இந்த விவகாரத்தில், இறந்த யானையின் உடலை யாருக்கும் தெரியாமல் பிச்சாண்டி புதைத்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்படி அடுத்தடுத்து மின்வேலியில் சிக்கி யானைகள் இறந்துகொண்டிருந்த சூழலில், தமிழ்நாடு அரசின் ‘டெல்’ வெடிமருந்து நிறுவனத்தின் பின்புறத்தில் 15 யானைகள் கடந்த சில நாள்களாக முகாமிட்டிருந்தன. அந்த யானைகளைப் பட்டாசு வெடித்து ஆந்திர வனத்துக்குள் விரட்டியடித்தனர் தமிழக வனத்துறையினர். ஆந்திர வனப்பகுதிக்குள் அந்த யானைகள் சென்றன. ஆந்திர வனத்துறையினர் அங்கிருந்து தமிழக வனத்துக்குள் துரத்திவிட்டனர். இப்படி மாறி மாறித் துரத்த, எங்கே செல்வதெனத் தெரியாமல் யானைகள் தத்தளித்தன. இந்தப் பிரச்னையை முன்வைத்து இரு மாநில வனத்துறை ஊழியர்களும் மோதிக்கொண்டனர். உயரதிகாரிகள் சென்று சமரசம் செய்த பிறகே பிரச்னை தணிந்தது.

இதுகுறித்து வன உயிரின ஆர்வலர்கள் கூறுகையில்,

‘‘கடந்த மூன்று மாதங்களில் மட்டும் குடியாத்தம் வனச்சரகத்தில் மின்சாரம் தாக்கி நான்கு யானைகள் இறந்துள்ளன.

மனிதர்கள் வசிக்குமிடத்தில் யானைகள் நடமாடுவதில்லை. யானைகளுடைய வழித்தடங்களைத்தான் மனிதர்கள் ஆக்கிரமித்துள்ளனர். ஆனால், யானைகள்மீதுதான் தவறு என்பதுபோல் தொடர்ந்து சித்திரிக்கப்படுகிறது. நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது, இந்தப் பகுதி யானைகளுக்குப் பாதுகாப்பு இல்லாததாக மாறிவருகிறது. இது திட்டமிட்ட படுகொலை. மனிதர்களைப் போன்று யானைகளும் ஓர் உயிர். இந்தப் பிரபஞ்சத்தின் மீது நமக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே உரிமை அவற்றுக்கும் இருக்கிறது. வனத்துறையினர்தான் அந்த உரிமைகளை நிலைநாட்ட வேண்டும். ஆனால், இங்கு வனத்துறை என்ற ஒன்று செயல்படுகிறதா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது’’ என்றனர்.

தமிழக அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாநிலப் பொதுச் செயலாளர் பாலாறு வெங்கடேசன், ‘‘உணவு, குடிநீர்ப் பற்றாக்குறையால்தான் யானைகள் வனத்தை விட்டு வெளியில் வருகின்றன. இங்கே நீரோடைகள் அதிகம் உள்ள குடியாத்தம், பேரணாம்பட்டுப் பகுதிகளில்தான் யானைகள் முகாமிடுகின்றன. உணவு தேடி அருகில் உள்ள கிராமங்களுக்குள் நுழையும் யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்துகின்றன. இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீர்வுகாண ஆந்திர அரசு தங்களுடைய வன கிராமங்களைச் சுற்றிலும் தடுப்புக் குழிகளை வெட்டியுள்ளது. அதுமட்டுமல்ல, காட்டைச் சுற்றி இரும்பு வேலி அமைத்துள்ளது. இப்படி, மக்களிடமிருந்து வன விலங்குகளையும் வனவிலங்குகளிடமிருந்து மக்களையும் பாதுகாக்கப் பல முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது ஆந்திர அரசு.

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஆந்திர அரசின் நடவடிக்கைகளை எடுத்துச் சொல்லி நாமும் அதுபோலச் செயல்படுத்தலாம் என்று கோரிக்கை வைத்துள்ளேன். நம் அதிகாரிகளோ, ‘நிதியில்லை’ என்று ஒரே வார்த்தையில் அதைப் புறக்கணித்துவிடுகின்றனர். அரசு அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதால்தான் வேறு வழியில்லாமல் விவசாயிகள் சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கின்றனர். யானைகளை அடித்துத் துன்புறுத்துகின்றனர்.

விவசாயிகளின் இந்தச் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. கடுமையான தண்டனைக் குரியது. அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், விவசாயிகளை அப்படியான கொடூரத்தை நிகழ்த்தத் தூண்டுவது தமிழக அரசின் அக்கறையின்மைதான். வனத்தைச் சுற்றித் தடுப்புக் குழிகளை வெட்ட வேண்டும். வனப் பகுதிக்குள் ஆங்காங்கே தொட்டி கட்டி, தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால், வனத்துறை எதையுமே செய்வதில்லை. நிதி இல்லை என்பதெல்லாம் சுத்தப்பொய்; அவர்களுக்கு மனமில்லை என்பதுதான் நிஜம்” என்றார்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் பேசினோம். ‘‘எல்லை கிராமங்களில் பேனர், துண்டுப்பிரசுரம் மட்டுமல்லாது, தண்டோரா மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம். வனத்துறையினரும் குழுக்களாகச் சென்று மக்களிடம் அறிவுறுத்துகின்றனர். யானைகளின் உயிரிழப்பைத் தடுக்க, கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன” என்றனர்.