Published:Updated:

`காலைக் கவ்விய முதலை... சாமர்த்தியமாகத் தப்பித்த விவசாயி!' பதறவைத்த திகில் சம்பவம்!

முதலைகள் ( Pexels )

தண்ணீரில் பதுங்கியிருந்த முதலை ஒன்று, லாகவமாக அவரின் காலை திடீரெனக் கவ்விப் பிடித்தது. முதலையின் தாடையில் விவசாயியின் கால் வசமாகச் சிக்கியிருந்தது.

`காலைக் கவ்விய முதலை... சாமர்த்தியமாகத் தப்பித்த விவசாயி!' பதறவைத்த திகில் சம்பவம்!

தண்ணீரில் பதுங்கியிருந்த முதலை ஒன்று, லாகவமாக அவரின் காலை திடீரெனக் கவ்விப் பிடித்தது. முதலையின் தாடையில் விவசாயியின் கால் வசமாகச் சிக்கியிருந்தது.

Published:Updated:
முதலைகள் ( Pexels )

வயல்வெளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடமாடும் போது, பாம்புகளாலும், வன விலங்குகளாலும் தாக்கப்படுவது அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், முதலையின் பிடியில் இருந்து, விவசாயி ஒருவர் தப்பிய திகில் சம்பவம் சமீபத்தில் ஒடிசாவில் நடந்துள்ளது. 

Representational Image
Representational Image
Credits : Pixabay

ஒடிசா, ராஜகனிகா தொகுதியில் உள்ள பரடியா கிராமத்தில் (Baradia village) 35 வயதான விவசாயி பிஸ்வால், தனது விவசாய நிலத்தில் இருந்து, பரடியாவை அடைய ஒரு சிறிய சிற்றோடையைக் கடக்க முற்பட்டிருக்கிறார். அப்போது ஓடையில் பதுங்கியிருந்த முதலை ஒன்று, லாகவமாக அவரின் காலை திடீரெனக் கவ்விப் பிடித்தது. முதலையின் தாடையில் விவசாயியின் கால் வசமாகச் சிக்கியிருந்தது. அவர் பதறிப்போய் கத்தி, கூச்சலிட்டிருக்கிறார்.

ஆனால், உதவிக்கு யாரும் வரவில்லை. அப்போது தன்னுடைய கையில் இருந்த அரிவாளின் மூலம், முதலையின் கண்ணைத் தாக்கி இருக்கிறார். அரிவாளால் முதலையின் கண்களில் குத்து விழ, முதலை அதன் பிடியைத் தளர்த்தி, அவரை விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. 

அதன் பின் காயமடைந்த அந்த விவசாயி, ராஜ்கனிகா சமூக நல மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

treatment
treatment

இது குறித்து பிடர்கனிகா வன அதிகாரி மனாஸ் தாஸ் கூறுகையில், ``பிடர்கனிகா தேசிய பூங்காவைச் (Bhitarkanika National Park) சுற்றியுள்ள கிராமங்களில் முதலைகளின் தாக்குதல்கள் வழக்கமாகிவிட்டது. கடந்த ஏழு மாதங்களிலேயே 4 பேர் முதலையின் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்துள்ளனர். 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

பூங்காவுக்குள் உள்ள ஆறுகள், சிற்றோடைகள் மற்றும் இதர நீர்நிலைகளில் முதலைகள் அதிகம் உள்ளன. இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனத் தொடர்ந்து கிராம மக்களை எச்சரித்து வருகிறோம். முதலைக்கும் மனிதர்களுக்கும் இடையே நடக்கும் தாக்குதலை தடுக்க 75 இடங்களில் தடுப்புகள் அமைக்கப் பட்டுள்ளன. இருப்பினும் முதலைக்கு எப்படியோ மக்கள் சிக்கி விடுகிறார்கள். ஆற்றிலோ, ஓடையிலோ அசைவற்று முதலைகள் படுத்திருப்பதால் இது இருப்பதையும் எளிதில் அறிய முடிவதில்லை. மனித நடமாட்டம் இருந்தால் பாம்புகள் நகரும். அந்தச் சத்தத்தை வைத்து மனிதர்கள் தப்பிவிடுகிறார்கள். ஆனால், முதலை அதுபோன்று எந்தவித சத்தத்தையும் எழுப்புவதில்லை. அதனாலேயே முதலையின் பிடியில் மக்கள் சிக்கிக்கொள்கிறார்கள்’’ என்று தெரிவித்தார்.