Published:Updated:

சீர்காழி: கிணற்றில் சிக்கிக்கொண்டு உயிருக்குப் போராடிய மரநாய்க்குட்டிகள்! - மீட்கப்பட்டது எப்படி?

மரநாய்க்குட்டிகள்

வீட்டின் கொல்லைப்புறத்திலுள்ள கிணற்றில் மூன்று மரநாய்க்குட்டிகள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தன.

சீர்காழி: கிணற்றில் சிக்கிக்கொண்டு உயிருக்குப் போராடிய மரநாய்க்குட்டிகள்! - மீட்கப்பட்டது எப்படி?

வீட்டின் கொல்லைப்புறத்திலுள்ள கிணற்றில் மூன்று மரநாய்க்குட்டிகள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தன.

Published:Updated:
மரநாய்க்குட்டிகள்

சீர்காழியில் வீட்டின் கிணற்றில் விழுந்து உயிருக்குப் போராடிய மூன்று மரநாய்க்குட்டிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டன.

மரநாய்க்குட்டிகள்
மரநாய்க்குட்டிகள்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த தென்பாதி சர்வ மானியத் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் வீட்டின் கொல்லைப்புறத்திலுள்ள கிணற்றில் மூன்று மரநாய்க் குட்டிகள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தன. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சீனிவாசன், உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கிணற்றில் தண்ணீரில் தத்தளித்த மூன்று மரநாய்க்குட்டிகளையும் பத்திரமாக மீட்டு வெளியில் கொண்டு வந்தார். அதில் ஒரு மரநாய்க்குட்டி அச்சத்தில் அங்கிருந்த மரத்தில் ஏறி நின்றுகொண்டது. மீதமுள்ள இரண்டு மரநாய்க்குட்டிகளை லாகமாகப் பிடித்து கூண்டில் அடைத்துவைத்துவிட்டு வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.

சீனிவாசன் வீட்டுக்கு விரைந்த வனத்துறையினர் மரத்தில் ஏறி நின்ற ஒரு மரநாய்க்குட்டியையும் பிடித்தனர். பின்னர் மூன்று மரநாய்க்குட்டிகளையும் கூண்டில் அடைத்து பாதுகாப்பாகக் கொண்டு சென்று வனப்பகுதியில் விட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து வீட்டின் உரிமையாளர் சீனிவாசனிடம் பேசினோம். ``என் வீட்டின் அருகில் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது. அந்த வீட்டைச் சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடப்பதால் பாம்பு, மரநாய் உள்ளிட்டவை சுற்றித்திரிகின்றன. இதனால் அக்கம் பக்கத்திலுள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் வசிக்கவேண்டியிருக்கிறது.

மரநாய்க்குட்டிகள்
மரநாய்க்குட்டிகள்

தென்னை மரங்களிலுள்ள தேங்காய்களை மரநாய்கள் சேதப்படுத்திவிடுகின்றன. பூட்டிக்கிடக்கும் வீடு, கொல்லைபுறங்களை நகராட்சி நிர்வாகம் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.