Published:Updated:

கூட்டாக களமிறங்கிய அதிகாரிகள்; கூடலூர் புலியைப் பிடிக்கும் ஏற்பாடுகள் தீவிரம்!

கூடலூர் தேவன் எஸ்டேட்டைச் சேர்ந்த சந்திரன் என்ற நபரையும், எஸ்டேட் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 10-க்கும் அதிகமான மாடுகளையும் தாக்கி கொன்ற ஆண் புலியின் உடலில் காயம் இருப்பதை தற்போது வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வனவளம் மிகுந்த‌ நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் பகுதிகளில் மனித-வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. அதிலும் குறிப்பாக குடியிருப்புகளை ஒட்டிய‌ பகுதிகளில் யானை மற்றும் புலிகளின் நடமாட்டங்கள்‌ அதிகரித்துள்ளன.

புலியை பிடிக்க களமிறங்கிய வனத்துறை
புலியை பிடிக்க களமிறங்கிய வனத்துறை
நீலகிரி: மின்சாரம் தாக்கி உயிரிழந்த காட்டுயானை; துண்டு துண்டாக வெட்டிப் புதைத்த கொடூரம்!

உடலில் ஏற்பட்டுள்ள‌ காயத்துடன் காட்டை விட்டு வெளியேறி கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் நடமாடி வரும் ஆண் புலி ஒன்று தேவன் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்ற நபரை தாக்கியது. கடுமையான‌ காயத்துடன் ஊட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

குறிப்பிட்ட அந்தப் புலி கடந்த 2 மாதங்களில் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 10-க்கும் அதிகமான மாடுகளையும் தாக்கி கொன்றுள்ளது. தொடர்ந்து மனிதர்களையும் கால்நடைகளையும் தாக்கி கொல்லும் அபாயம் இருப்பதால் உள்ளூர் மக்கள் வனத்துறைக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தினர். இதனால், அந்தப் புலி பிடிக்கும் பணியில் நூற்றுக்கணக்கான வனத்துறையினர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது களமிறங்கியுள்ளனர்.

புலியை பிடிக்க களமிறங்கிய வனத்துறை
புலியை பிடிக்க களமிறங்கிய வனத்துறை

புலியைப் பிடிக்கும் பணி குறித்து நம்மிடம் பேசிய வனத்துறை அதிகாரி ஒருவர், ``முதுமலையில் T-23 எனப் பெயரிடப்பட்டு கண்காணித்து வந்த ஆண் புலியின் பட்டைகளைப் போன்றே இதற்கும் உள்ளது. ஒரு வேளை அதே புலியாகக் கூட இருக்கலாம். சுமார் 13 வயது மதிக்கத்தக்க இந்தப் புலியின் உடலின் பல பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. அதனால், காட்டில் இரையை வேட்டையாட முடியாத நிலையில் உள்ளது. எளிதாக வேட்டையாடக்கூடிய கால்நடைகள் மற்றும் மனிதர்களை தாக்கி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தப் புலியை பிடிக்க கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறப்புக் குழு உட்பட நமது வனத்துறை, காவல்துறை, கால்நடை மருத்துவர்கள், அதிரடிப்படை என நூற்றுக்கும் மேற்பட்டோர் களத்தில் இருக்கிறோம். புலியைப் பிடிப்பதற்கான அனைத்து பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கூண்டுகள், கண்காணிப்பு கேமிராக்கள், ட்ரோன் கேமராக்கள் எனப் பல வழிகளில் முயன்று வருகிறோம்" என்றார்.

புலியை பிடிக்க களமிறங்கிய வனத்துறை
புலியை பிடிக்க களமிறங்கிய வனத்துறை
 “ட்ரோன் பறந்ததுக்குப் புகார்... கொலை கொள்ளைக்கு இல்லையா?”

புலி நடமாட்டம் குறித்து பேசிய தேவன் எஸ்டேட் மக்கள், ``மாடு மேய்த்துக் கொண்டிருந்த சந்திரனை புலி தாக்கி கொன்றது முதல் வீட்டை விட்டு வெளியே வரவே பயமாக உள்ளது. இந்தப் புலி பிடித்து காட்டுக்குள் விடுவித்தால்தான் எங்களுக்கு நிம்மதி" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு