Published:Updated:

`உணவு, தண்ணீர் எடுக்கவில்லை!' - குட்டியின் சடலத்தருகே 6-வது நாளாக காத்துக்கிடக்கும் தாய் யானை

தாய் யானை
தாய் யானை

சேற்றில் சிக்கி இறந்த தன் குட்டி எழுந்துவராதா என்ற ஆசையில், 6-வது நாளாகக் குட்டியின் அருகில் யாரையும் செல்லவிடாமல் இரவு பகலாக குட்டியின் உடலைக் காக்கும் தாய் யானையின் பாசப்போராட்டம், அனைவரையும் கண் கலங்கவைத்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகில் உள்ள பள்ளிப்பட்டி பகுதியில், கடந்த வாரம் இரவு நேரத்தில் மேய்ச்சலுக்கு வந்த யானைக் கூட்டத்தில் இருந்த குட்டி யானை, சேற்றில் சிக்கியுள்ளது. கூட்டத்து யானைகள், குட்டியை மீட்கப் போராடியுள்ளன. ஆனால் முடியாமல், குட்டி யானை இறந்தது. அந்தப் பகுதியில் யானையின் பிளிறல் வழக்கத்திற்கு மாறாகக் கேட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, வனத்துறை ஊழியர்கள் வந்து பார்க்கையில், யானைக் கூட்டம் ஒன்று ஆக்ரோஷமாக இருந்துள்ளது.

தாய் யானை
தாய் யானை

அருகில், ஒரு வயது மதிக்கத்தக்க குட்டி யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது. குட்டி இறந்தை அறியாத மற்ற யானைகள், அதை மீட்கப் போராடியதாக வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர்.

குட்டி யானை இறந்த காரணத்தை உறுதி செய்ய, உடலைக் கைப்பற்றி கூறாய்வு செய்ய வனத்துறை முடிவுசெய்து, குட்டி யானையின் சடலத்தைக் கைப்பற்ற முயன்றனர்.

தாய் யானை
தாய் யானை

ஆனால், மிகுந்த ஆக்ரோஷத்துடன் மற்ற யானைகள் இருந்ததாலும், குட்டியின் அருகிலேயே தாய் யானை இருந்ததாலும் உடலை மீட்க முடியாமல்போனது.

இரண்டாவது நாளும் குட்டியை மீட்கக் களமிறங்கினர். மற்ற யானைகள் வேறிடத்திற்கு நகர்ந்து சென்றிருந்தபோதும், இறந்த குட்டியின் தாய் யானை, குட்டியின் உடல் அருகிலேயே நின்று கொண்டிருந்தது. வனத்துறையினர் விரட்டினாலும் நகராமல் இருந்தது.

தாய் யானை
தாய் யானை

தெடர்ந்து கண்காணித்துவந்த வனத்துறையினர், 5 நாள்களாக று குட்டியை மீட்க முயற்சி மேற்கொண்டனர். அந்தக் குட்டி யானையின் அருகில் செல்ல வனத்துறை ஊழியர்கள் முயன்றபோது, புதர் மறைவில் இருந்த தாய் யானை அவர்களை விரட்டியது. உணவு, தண்ணீர்கூட இல்லாமல் 5 நாள்களைக் கடந்து கண்ணில் நீர் வழிய தாய் யானை, குட்டியின் உடல் அருகே காத்துக்கிடக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

`இரண்டாவது நாளாகத் தொடரும் பாசப்போராட்டம்! - இறந்த குட்டியின் உடலை நெருங்கவிடாத தாய் யானை

தாய் யானையின் பாசப்போராட்டம் குறித்து வனத்துறை ஊழியர்கள் கூறுகையில், ``வழக்கமாக குட்டி இறந்தால் தாய் யானை ஒன்று அல்லது இரண்டு நாள் மட்டுமே அருகில் நிற்கும். உடல் அழுகத் தொடங்கினால் நகர்ந்து சென்றுவிடும். ஆனால், இந்த யானையோ நம்மை கண்கலங்கவைக்கிறது.

தாய் யானை
தாய் யானை

இதோடு வந்த மற்ற யானைகள் சென்றுவிட்டபோதும், தாய் யானை மட்டும் தாரை தாரையாய் கண்ணில் நீர் வழிய, மிகச் சோர்வாக உள்ளது. தாய் யானைக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால், தர்பூசணி உள்ளிட்ட பழங்களை அருகில் வைத்துவிட்டு வருகிறோம்'' என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு