Published:Updated:

கிணற்றில் விழுந்த கன்று; 3 மணி நேர போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம்!

குன்னூர் அருகில் இருக்கும் உபதலை, ஆலோரை கிராமத்தில் மலை ரயில் பாதையோரத்தில் குட்டிகளுடன் காட்டுமாடுகள் கூட்டமாக வந்தன. அங்கிருந்த திறந்தவெளி கிணற்றில் காட்டுமாடு கன்று ஒன்று தவறி உள்ளே விழுந்தது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உணவு, தண்ணீர் தேடி தேயிலைத் தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் காட்டுமாடு, கரடி, சிறுத்தை போன்ற வன விலங்குகள் கிணற்றில் தவறி விழுவது தொடர்கதையாக இருக்கிறது.

 மலை ரயில் பாதை
மலை ரயில் பாதை
``ஒரு ஏக்கருக்கு ₹20,000 கேட்டோம்; ஆனால் இப்ப..!" - அரசுக்கு எதிராக கொந்தளிக்கும் விவசாயிகள்

சமீபத்தில் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிணற்றில் தவறி விழுந்த கரடி‌ மற்றும் ஒரு சிறுத்தையை பத்திரமாக மீட்டு வனத்துக்குள் விடுவித்தனர். இந்த நிலையில், குன்னூர் அருகில் இருக்கும் உபதலை, ஆலோரை கிராமத்தில் மலை ரயில் பாதையோரத்தில் குட்டிகளுடன் காட்டுமாடுகள் கூட்டமாக வந்தன. அங்கிருந்த திறந்தவெளி கிணற்றில் காட்டுமாடு கன்று ஒன்று தவறி உள்ளே விழுந்தது.

மேலே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருந்த கன்றை மீட்க வனத்துறையினருக்கு உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்தனர். மீட்பு குழுவினருடன் அந்த பகுதிக்கு வந்த வனத்துறையினர் சுமார் 3 மணி நேரம் போராடி காட்டுமாடு கன்றை கயிறு கட்டி மேலே ஏற்றினர்.

காட்டுமாடு கன்று
காட்டுமாடு கன்று
மின்சாரம் தாக்கி உயிரிழந்த குட்டி; தட்டி எழுப்ப முயற்சி செய்த தாய் யானை; உருகவைத்த வீடியோ!

கால்நடை மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளித்து கூட்டத்துடன் சேர்த்து வைத்தனர். கூட்டத்தைக் கண்டதும் துள்ளி குதித்து ஓடிய காட்டுமாடு கன்றினைக் கண்டு மீட்பு குழுவினர் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு