அருமையான வருமானம் தரும் ஆடு வளர்ப்பு! - பசுமை விகடன் வழங்கும் ஆன்லைன் பயிற்சி

ஆடு வளர்ப்பு குறித்து வருகிற ஆகஸ்ட் 29-ம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணி முதல் 8 மணி வரை பயிற்சி அளிக்க இருக்கிறார் முனைவர் சி.சௌந்தரராஜன்.
விவசாயத்தின் உபத் தொழிலாக இருந்து வந்த ஆடு வளர்ப்பு இன்று பிரதான தொழிலாக மாறி நல்ல வருமானம் கொடுத்து வருகிறது. காரணம், ஆட்டுக்கான சந்தை இன்று வளர்ந்து நிற்பதுதான். 1 கிலோ ஆட்டுக்கறி கிட்டத்தட்ட 1,000 ரூபாயைத் தொட்டு நிற்கிறது. சந்தை நன்றாக இருப்பதால் ஆடுகளின் உற்பத்தி சார்ந்த விஷயத்தில் கவனத்தில் கொண்டால், ஆடு வளர்ப்பில் நல்ல லாபம் பார்க்க முடியும்.
ஆடு வளர்ப்பை எடுத்துக்கொண்டால், மேய்ச்சல் முறை ஆடு வளர்ப்பு, கொட்டில் முறை ஆடு வளர்ப்பு என்று இரண்டு வகையில் மேற்கொள்ளலாம். இதில் இரண்டும் கலந்த மாதிரியும் ஆடுகளை வளர்க்கலாம். மேய்ச்சல் முறையில் வளர்த்தால் பசுந்தீவனத்துக்கும் செலவிடும் தொகை பெருவாரியாகக் குறையும். இன்னொன்று சொந்த நிலம் இருக்க வேண்டிய அவசியமில்லை. கொட்டகை அல்லது பட்டி அமைப்பதற்கான இடம் இருந்தால் போதும். ஆடுகளை வாங்குவதற்கான முதலீடு மட்டுமே ஆரம்பகட்ட தேவையாக இருக்கும். சொல்லப்போனால் 50,000 ரூபாய் முதலீட்டில் 4 ஆடுகளை வாங்கி வளர்க்க ஆரம்பித்துவிடலாம்.

கொட்டில் முறையில் கொட்டிலுக்கு முதலீடு, ஆடு வாங்கு வதற்கு ஒரு முதலீடு, பசுந்தீவனம் வளர்ப்பு, பராமரிப்பு என்று அதற்கான தேவைகள் அதிகம். இதில் உங்கள் தேவையைப் பொறுத்து வளர்ப்பு முறைக்கான முறைகளைத் தேர்ந்தெடுக்கலாம். ஆடு வளர்ப்பில் வெள்ளாடு, செம்மறியாடு என இருவகைகள் இருக்கின்றன. பெரும்பான்மையானோர் வெள்ளாடு வளர்ப்பைத்தான் தேர்ந்தெடுக்கின்றனர். அடுத்ததாகச் செம்மறியாடு வளர்ப்பைத் தேர்ந்தெடுக்கின்றனர். மேற்சொன்ன முறையில் இரண்டு வகையான ஆடு வளர்ப்பையும் மேற்கொள்ள முடியும். ஆடு வளர்ப்பில் குட்டிகள்தான் வருமானம். அதனால், ‘இன்றைய குட்டிகள், நாளைய ஆடுகள்’ என்பதை நினைவில் கொண்டு அதற்கேற்றவாறு ஆடு வளர்ப்பை மேற்கொள்ள வேண்டும்.
இந்த ஆடு வளர்ப்பு குறித்து வருகிற ஆகஸ்ட் 29-ம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணி முதல் 8 மணி வரை பயிற்சி அளிக்க இருக்கிறார் முனைவர் சி.சௌந்தரராஜன். இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்லைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஏனாத்தூர் உழவர் பயிற்சி நிலையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியராக உள்ளார். ஆடு வளர்ப்பில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவருடைய ஆலோசனையில் பல ஆட்டுப் பண்ணைகள் உருவாக்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றன.

பசுமை விகடன் வழங்கும் `அருமையான வருமானம் தரும் ஆடு வளர்ப்பு’ என்ற நேரலை (ஆன்லைன்) பயிற்சி வகுப்பில் பேச இருக்கிறார். அனைவரும் இந்தப் பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். பயிற்சிக் கட்டணம் ரூ.250.
நாள்: 29.8.2020, சனிக்கிழமை.
நேரம்: மாலை 6 மணி முதல் 8 மணி வரை.
கட்டணம் செலுத்த இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
மேலும் இந்த கியூ.ஆர் கோடை ஸ்கேன் செய்தும் கட்டணம் செலுத்தலாம்.
