Published:Updated:

மூணாறில் 10 பசுக்களைக் கொன்ற புலி பிடிபட்டது எப்படி?

பிடிபட்ட புலி

புலிக்கு கண்பார்வை பாதிப்பு ஏற்பட்டிருந்ததால், அதனால் காட்டில் வேட்டையாட முடியாத நிலை இருந்திருக்கலாம். தொழுவில் ஒரு மாட்டை கடித்தால் மற்ற மாடுகள் அனைத்தும் அலறி கத்தியிருக்கும். புலி ஒரு மாட்டைக் கடித்து இழுத்துச் செல்ல முடியாமல் அடுத்தடுத்த மாடுகளைக் கடித்துள்ளது.

மூணாறில் 10 பசுக்களைக் கொன்ற புலி பிடிபட்டது எப்படி?

புலிக்கு கண்பார்வை பாதிப்பு ஏற்பட்டிருந்ததால், அதனால் காட்டில் வேட்டையாட முடியாத நிலை இருந்திருக்கலாம். தொழுவில் ஒரு மாட்டை கடித்தால் மற்ற மாடுகள் அனைத்தும் அலறி கத்தியிருக்கும். புலி ஒரு மாட்டைக் கடித்து இழுத்துச் செல்ல முடியாமல் அடுத்தடுத்த மாடுகளைக் கடித்துள்ளது.

Published:Updated:
பிடிபட்ட புலி

கேரளா மூணாறில் கடந்த ஒரு வாரமாகவே கே.டி.ஹெச்.பி நிறுவனத்துக்குச் சொந்தமான எஸ்டேட் பகுதியில் ஒரு கன்றுக்குட்டி உட்பட 5 பசுக்களைக் கடித்துக் கொன்றது. இதனால் கோதைமேடு, ராஜமலை, இரவிகுளம், நேஷனல் பார்க் உள்ளிட்ட பகுதி மக்கள் அன்றாட பணிகளுக்கு கூடி வெளியே வர அஞ்சினர் வீட்டுக்குள் முடங்கினர்.

புலி
புலி
மாதிரி படம்

வனத்துறையினர் புலியைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து பிடிக்க முயன்றனர். இறந்த மாடுகளை தொழுவத்திலும், தொழுவத்துக்கு வரும் பகுதியிலும் போட்டு, புலி மீண்டும் வந்தால் பிடித்துவிடலாம் எனக் காத்திருந்தனர். ஆனால், சுதாரித்துக்கொண்ட புலியோ அதேபகுதியில் உள்ள மற்றொரு தொழுவத்துக்குச் சென்று ஒரு கன்று உட்பட 4 பசுக்களைக் கடித்துக் கொன்றுவிட்டு தப்பிவிட்டது. மொத்தம் 2 கன்றுகள் உட்பட 10 மாடுகள் பலியாகியுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர். இதனால் வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடிக்க ஏற்பாடு செய்தனர்.

இதுகுறித்து வனத்துறையுடன் இணைந்து புலியைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்ட வனஉயிரின ஆர்வலர் செந்தில்குமாரிடம் பேசினோம். ``தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 6 குழுக்கள் புலியைப் பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. கூண்டின் ஒருபுறம் உயிருடன் இருக்கும் கால்நடையை வைத்து மறுபுறம் புலி வருவது போன்ற ஏற்பாட்டை செய்தோம். ஏற்கெனவே புலி வந்த தொழு பகுதியில் 2 கூண்டுகளை வைத்தோம். இந்தப் புலி ஏற்கெனவே தன் புத்திசாலி தனத்தைக் காட்டி வேறொரு தொழுவுக்குச் சென்றது போல மீண்டும் செல்லக்கூடும் என எண்ணிணோம்.

செந்தில்குமார்
செந்தில்குமார்

அதனால் 3 வது கூண்டை கடலாறு என்ற பகுதியில் வைத்தோம். ஏனென்றால் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் புலி நடமாட்டத்தைப் பார்த்ததாகக் கூறியிருந்தார். மூன்று கூண்டுகளை ஏற்பாடு செய்துவிட்டு காத்திருந்தோம். எதிர்பார்த்தது போலவே புலி கடலாறு பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிக்கிக்கொண்டது. தொடர்ச்சியாக ஆக்ரோஸத்துடன் இருந்த புலியை ஒருவாறு சாந்தமானவுடன் கால்நடை மருத்துவக் குழு மூலம் பரிசோதனைக்கு உட்படுத்தினோம். அதில் 9 வயதான புலி மிகவும் பலமாக இருந்ததும், தற்காலிகமான கண்புரை பாதிப்பு ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது. 

பொதுவாக காட்டில் வாழும் புலிகள் வெளியேறுவது இல்லை. பலமான புலிகள் வனஉயிர்களை வேட்டையாடி சாப்பிடத்தான் விரும்பும். தான் பலவீனமடையும் போதுதான் காட்டை விட்டு வெளியேறி கால்நடைகளைத் தாக்கும். காட்டைவிட்டு வெளியேறி மனிதர்கள் வளர்க்கும் கால்நடைகளைத் தாக்கினால், அந்தப் புலிக்கு வயது மூப்பு ஏற்பட்டிருக்கும் அல்லது நோய் ஏற்பட்டிருக்கும். இதுமட்டுமல்லாது புலிகள் இடப்பெயர்வின் போது இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளன. 

பிடிபட்ட புலி
பிடிபட்ட புலி

இந்தப் புலி மிகவும் பலமாக இருந்தபோதிலும் கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டிருந்ததால், அதனால் காட்டில் வேட்டையாட முடியாத நிலை இருந்திருக்கலாம். அதனால் தொழுவில் உள்ள பசுக்களை குறிவைத்து தாக்கியுள்ளது. பசுக்கள் கயிறால் கட்டி வைக்கப்பட்டிருந்து இருக்கிறது. ஒரு மாட்டைக் கடித்தால் மற்ற மாடுகள் அனைத்தும் அலறி கத்தியிருக்கும் இதனால் புலி ஒரு மாட்டைக் கடித்து இழுத்துச் செல்ல முடியாமல் அடுத்தடுத்த மாடுகளைக் கடித்துக் கொன்றுள்ளது. 

தற்போது கண் பாதிப்புக்கான சிகிச்சையை கால்நடை மருத்துவர்கள் கொடுத்து வருகின்றனர். முழுமையாக சரியானதும் அந்தப் புலியைத் தொடர்ச்சியான கண்காணிப்பில் வைத்திருந்து மீண்டும் காட்டில் விடுவது குறித்து வனத்துறை மற்றும் வனஉயிரின ஆர்வலர் உள்ளிட்டோர் சேர்ந்து தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்குத் தெரிவித்து முடிவெடுப்பர்'' என்றார்.