Published:Updated:

காட்டுயிர் வேட்டையின் கோட்டை... மதுரை வனக்கோட்டத்தில் நடப்பது என்ன?

வேட்டை
வேட்டை

"தமிழகம் மற்றும் கேரளாவில் நடக்கும் அனைத்துவிதமான வனவிலங்கு வேட்டைகளுக்கும் மூளையாகச் செயல்படுவது அஜி பிரைட்தான்'' என்கின்றனர் வனத்துறையைச் சேர்ந்த சிலர்.

'2010 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் இந்திய காடுகளில் 265 யானை வேட்டைகள் நடந்துள்ளன என்கிறது, இந்திய காட்டுயிர் பாதுகாப்பு அமைப்பு. யானைத் தந்தங்கள் மட்டுமன்றி, முள்ளம்பன்றி முட்கள், எறும்புத்தின்னி செதில்கள் என வேகமெடுக்கும் வேட்டைகள், காட்டுயிர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது''என்று கலங்குகின்றனர் வனவிலங்கு ஆர்வலர்கள்.

வனவிலங்கு வேட்டையை இன்றளவும் உயிர்ப்போடு வைத்திருப்பது இரண்டு விஷயங்கள். ஒன்று, பணம் படைத்தவர்கள் கௌரவத்துக்காக யானைத் தந்தம், மான் கொம்பு போன்ற வனவிலங்குகளின் உறுப்புகளால் வீட்டை அலங்கரிப்பது. இன்னொன்று, சீனப் பாரம்பர்ய மருத்துவம். துரதிர்ஷ்டவசமாக, விலங்கு உறுப்புகளைக்கொண்டு செய்யப்படும் இந்த மருத்துவமுறையை கடந்த ஆண்டு உலக சுகாதார நிறுவனமும் அங்கீகரித்துவிட்டது. இதனால், வனவிலங்கு வேட்டையை சீனக் கள்ளச்சந்தை முடுக்கிவிட்டிருக்கிறது. அதன் விளைவு தமிழகக் காடுகளிலும் எதிரொலிக்கிறது என்பதுதான் வேதனை.

''கீரிப்பிள்ளை முடியைக்கொண்டு ஓவியம் வரையக்கூடிய பிரஷ் தயாரிப்பது இப்போது பிரபலமாகியிருக்கிறது. 'அதில் தயாரிக்கப்படும் பிரஷ் அதிக உறிஞ்சுத்தன்மையோடு இருப்பதால், அடிக்கடி சாயத்தில் தொட்டு ஓவியம் வரைய வேண்டியிருக்காது. ஒருமுறை பிரஷ்ஷில் தொட்டு எடுக்கப்படும் சாயமே நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கும்'என்று சொல்கின்றனர். ஒரு கீரிப்பிள்ளையிலிருந்து சுமார் 40 கிராம் முடி கிடைக்கும். அதில் 20 கிராம் மட்டுமே பிரஷ் தயாரிக்கும் அளவுக்குத் தரமாக இருக்கும். ஆக, ஒரு கிலோ முடி வேண்டுமென்றால், 50 கீரிப்பிள்ளைகளை வேட்டையாட வேண்டும்''என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

சிங்கம், குபேந்திரன் ஆகிய இருவர்தான் தமிழகத்தில் யானைகளைச் சுட்டு வீழ்த்தக்கூடிய வேட்டைக் காரர்களாக அறியப்படுபவர்கள். இவர்களுக்கு மேலே இடைத்தரகராகச் செயல்படுவது கேரளாவைச் சேர்ந்த பாபு ஜோஸ்

கடந்த ஆண்டு நவம்பரில் கேரளம், கர்நாடகம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் காட்டுயிர் குற்றத் தடுப்புப் பிரிவினர் 'ஆபரேஷன் க்ளீன் ஆர்ட்'என்ற பெயரில் நடத்திய அதிரடி சோதனையில், கீரிப்பிள்ளையின் ரோமங்களால் தயாரிக்கப்பட்ட 54,352 பிரஷ்களைக் கைப்பற்றினர். இப்படியான சோதனைகளும் கடைநிலை ஊழியர்களைக் கைதுசெய்வதும் அடிக்கடி நடந்தாலும், இதற்கெல்லாம் மூளையாகச் செயல்படும் முக்கியக் குற்றவாளிகளை நெருங்குவது அரிதிலும் அரிதாகவே உள்ளது.

அப்படியோர் அரிதான சம்பவத்தை தமிழக வனத்துறை அதிகாரியான உமா, கேரளத்தில் நிகழ்த்திக்காட்டினார். தென்னிந்தியாவில் நடக்கும் காட்டுயிர் வேட்டைகளுக்குக் காரணகர்த்தாவாகச் செயல்பட்டுவந்த அஜி பிரைட் என்பவரை, 2015-ம் ஆண்டு திருவனந்தபுரத்தின் வன அதிகாரியாக இருந்த உமா கைதுசெய்தார். இருப்பினும், உமா மீது அஜி பிரைட் தொடுத்த மனித உரிமை வழக்கு வெளிச்சத்துக்கு வந்த அளவுக்கு, அஜி பிரைட் மீதிருந்த யானை வேட்டை தொடர்பான வழக்கு வெளிச்சத்துக்கு வரவில்லை.

"தமிழகம் மற்றும் கேரளாவில் நடக்கும் அனைத்துவிதமான வனவிலங்கு வேட்டைகளுக்கும் மூளையாகச் செயல்படுவது அஜி பிரைட்தான்'' என்கின்றனர் வனத்துறையைச் சேர்ந்த சிலர். அவர்களிடம் பேசினோம். ''சிங்கம், குபேந்திரன் ஆகிய இருவர்தான் தமிழகத்தில் யானைகளைச் சுட்டு வீழ்த்தக்கூடிய வேட்டைக் காரர்களாக அறியப்படுபவர்கள். இவர்களுக்கு மேலே இடைத்தரகராகச் செயல்படுவது கேரளாவைச் சேர்ந்த பாபு ஜோஸ். இந்த பாபு ஜோஸுக்கும் மேலே உள்ளவர்தான் அஜி பிரைட். அவர்களுக்கு வரும் ஆர்டரைப் பொறுத்து வேட்டைக் கான அளவுகோலைத் தீர்மானித்து ஆட்களைக் காட்டுக்குள் அனுப்புகின்றனர். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/35CyyhA

காட்டுயிர் வேட்டையின் கோட்டை... மதுரை வனக்கோட்டத்தில் நடப்பது என்ன?

அவர்களின் கட்டளைப்படி தனித்தனியாகப் பிரிந்து பல்வேறு வழிகளில் காட்டுக்குள் நுழையும் வேட்டைக்காரர்கள், வேட்டையை ஆரம்பிப்பார்கள். வேட்டை முடிந்ததும் மறைவான ஓரிடத்தில் கூடி, வேட்டையாடிய விலங்குகளின் உடல்களை அங்கேயே கூறுபோடுவார்கள். பிறகு தேவையான பாகங்களை மட்டும் எடுத்துக்கொண்டு, மீதத்தைக் காட்டுக்குள்ளேயே புதைத்து விட்டு, வேட்டை நடந்ததற்கான தடம் தெரியாமல் காட்டுக்குள்ளிருந்து வெளியேறிவிடுகின்றனர். சீனா, ஜப்பான் மற்றும் சில மத்திய கிழக்கு நாடுகளிலும் வனவிலங்கு உறுப்புகளுக் கான கள்ளச்சந்தை பெரிய அளவில் இருக்கிறது. அந்தக் கள்ளச்சந்தை களிலிருந்து வரும் ஆர்டர்களுக்கு ஏற்ப அஜி பிரைட் போன்ற வேட்டைப் புள்ளிகள் கொழிக்கின்றனர்''என்று விவரித்தனர்.

தமிழகத்தில் காட்டுயிர்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களின் நிலை அறிய களமிறங்கியது விகடன் ஆர்.டி.ஐ குழு. கடந்த ஒன்பது ஆண்டுகளில் வனவிலங்கு வேட்டை தொடர்பாகப் பதியப்பட்ட வழக்குகள்குறித்த தகவல்கள் நம்மை அதிரவைத்தன.

தமிழகத்திலேயே மதுரை வனக்கோட்டம்தான் காட்டுயிர் வேட்டையின் கோட்டை. 2011-ம் ஆண்டு முதல் 2019 மார்ச் மாதம் வரை மதுரை வனக்கோட்டத்தில் மட்டும் பதியப்பட்ட வனவிலங்கு வேட்டை மற்றும் திருட்டு வழக்குகளின் எண்ணிக்கை மொத்தம் 7,068. தமிழகத்தில் உள்ள ஒன்பது வனச்சரகங்களில்தான் புலி நகங்கள், மான் கொம்புகள், நரியின் தலை, தேவாங்கு தோல், எறும்புத்தின்னி செதில்கள் எனப் பல்வேறு வனவிலங்கு களும் அதிகளவில் வேட்டையாடப்பட்டிருப்பதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

- இதன் பின்னணி குறித்த விரிவான பார்வையை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > https://www.vikatan.com/news/animals/wildlife-hunting-by-aji-bright-network

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு