Published:Updated:

ஊட்டி: மின்வேலியா... வயிற்றில் இருந்த பிளாஸ்டிக்கா? - காட்டுமாடு இறப்பில் குழம்பும் வனத்துறை

காட்டு மாடு

மின்வேலியில் சிக்கி இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. மேலும், இதன் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் இருப்பது, பிரேத பரிசோதனை செய்தபோது கண்டறியப்பட்டது.

ஊட்டி: மின்வேலியா... வயிற்றில் இருந்த பிளாஸ்டிக்கா? - காட்டுமாடு இறப்பில் குழம்பும் வனத்துறை

மின்வேலியில் சிக்கி இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. மேலும், இதன் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் இருப்பது, பிரேத பரிசோதனை செய்தபோது கண்டறியப்பட்டது.

Published:Updated:
காட்டு மாடு

ஊட்டி மிஷனரி ஹில் பகுதியில், விவசாய நிலத்தில் 10 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டுமாடு உயிரிழந்து கிடந்தது. அது, மின்சாரம் தாக்கி இறந்ததா அல்லது அளவுக்கு அதிகமாக அதன் குடலிலிருந்த பிளாஸ்டிக் காரணமா என வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

காட்டு மாடு
காட்டு மாடு

நீலகிரி வன கோட்டத்துக்குட்பட்ட வனப்பகுதிகளில் காட்டுமாடுகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் இருக்கின்றன. ஊட்டி நகரை ஒட்டி அமைந்திருக்கும் தொட்டபெட்டா, டைகர்ஹில் வனப்பகுதிகளில் காட்டுமாடுகள் அதிகமாக இருக்கின்றன. இவை அவ்வப்போது ஊட்டி நகருக்கும், அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கும் வந்து செல்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தநிலையில், ஊட்டி மிஷனரி ஹில் பகுதியிலுள்ள மலைக்காய்கறி விளைநிலத்தில், காட்டுமாடு ஒன்று இறந்துகிடந்தது. அதைப் பார்த்த பொதுமக்கள், வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். நீலகிரி கோட்ட உதவி வனப் பாதுகாவலர் மற்றும் வனத்துறையினர் நிகழ்விடத்துக்கு வந்து இறந்துகிடந்த காட்டுமாட்டின் உடலைப் பார்வையிட்டனர்.

வனத்துறையினர்
வனத்துறையினர்

அது, விளைநிலத்திலுள்ள வேலியின் மீது விழுந்த நிலையில் இறந்துகிடந்தது. உடனடியாக கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டு, புதைக்கப்பட்டது.

காட்டுமாடு உயிரிழப்பு குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் நம்மிடம் பேசுகையில், ``இறந்தது ஓர் ஆண் காட்டுமாடு. சுமார் 10 வயது இருக்கக்கூடும். மின்வேலியில் சிக்கி இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. மேலும், இதன் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் இருப்பது, பிரேத பரிசோதனை செய்தபோது கண்டறியப்பட்டது

வனத்துறையினர்
வனத்துறையினர்

ஆய்வுக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே உரிய காரணம் தெரியவரும். சம்பந்தப்பட்ட நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துவரும் ராஜேந்திரன் என்பவரிடமும் விசாரணை மேற்கொண்டுவருகிறோம்" என்றார்.