Published:Updated:

`கோவை வனப்பகுதிக்குள் சென்ற கும்கி!’ - மூன்று மணி நேரம் கழித்து தேடிப்பிடித்த வனத்துறை

குருபிரசாத்

கோவையில், வனப்பகுதிக்குள் சென்ற கும்கி யானையை மூன்று மணி நேரத்துக்குப் பிறகு வனத்துறையினர் கண்டுபிடித்தனர்.

கும்கி வெங்கடேஷ்
கும்கி வெங்கடேஷ்

கோவை மாவட்டம் சாடிவயல் வனப்பகுதியிலுள்ள யானைகள் முகாமிற்கு, கடந்த மாதம் சுயம்பு என்ற கும்கி யானை டாப்ஸ்லிப் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், வெங்கடேஷ் என்ற மற்றொரு கும்கி யானை, டாப்ஸ்லிப்பில் இருந்து கொண்டுவரப்பட்டது.

வெங்கடேஷ்
வெங்கடேஷ்

இந்த யானைகள், தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, ஓணாப்பாளையம், நரசீபுரம் போன்ற பகுதிகளில் ஊருக்குள் வந்து விளை நிலங்களைச் சேதப்படுத்தும் காட்டு யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

இந்நிலையில், வெங்கடேஷ் என்ற கும்கி யானை, சங்கிலியை அறுத்துவிட்டு முகாமுக்கு அருகிலுள்ள வனப்பகுதிக்குள் சென்று விட்டது. யானையைத் தேடி பாகன்களும் வனத்துறையினரும் சென்றனர். பின்னர் 3 மணி நேரத்துக்குப் பிறகு, யானையைக் கண்டுபிடித்து முகாமிற்கு அழைத்துவந்தனர்.

``யானை உணவுக்காகத்தான் சென்றது. மாயமாகியிருந்தால் அதைப் பிடித்திருக்கவே முடியாது” என்று பாகன்களும் வனத்துறையினரும் கூறியுள்ளனர்.

கும்கி வெங்கடேஷ்
கும்கி வெங்கடேஷ்

இந்த வெங்கேடஷ் கும்கி யானை, ஏற்கெனவே டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் இருந்த போதும், காணாமல் சென்று, பிறகு கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.