Published:Updated:

கூட்டம் கூட்டமாக இறந்த விலங்குகள், பறவைகள்... அதிர்ச்சியில் உறைந்த குன்னூர்!

coonoor dump yard

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள ஓட்டுப்பட்டுரை பகுதியில், மர்மமான முறையில் கூட்டம் கூட்டமாக நாய், பூனை, காட்டுப்பன்றி, காகம் உள்ளிட்ட விலங்குகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டம் கூட்டமாக இறந்த விலங்குகள், பறவைகள்... அதிர்ச்சியில் உறைந்த குன்னூர்!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள ஓட்டுப்பட்டுரை பகுதியில், மர்மமான முறையில் கூட்டம் கூட்டமாக நாய், பூனை, காட்டுப்பன்றி, காகம் உள்ளிட்ட விலங்குகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
coonoor dump yard

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ளது ஓட்டுப்பட்டரை, இதன் அருகில் வசம்பள்ளம், வாசுகி நகர், வள்ளுவர் நகர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. மேலும், இந்தப் பகுதியில் குன்னூர் நகராட்சியின் குப்பைக்கிடங்கும் உள்ளது.

coonoor dump yard
coonoor dump yard

குன்னூர் நகரில் சேகரமாகும் குப்பை இங்கு கொண்டுவந்து கொட்டப்படுகிறது. இந்த குப்பைகளில் உள்ள இறைச்சிக் கழிவுகள், காய்கறி மற்றும் பழம் உள்ளிட்ட உணவுக் கழிவுகளை உன்ன வன விலங்குகளும், வளர்ப்புப் பிராணிகளும் வந்து முகாமிடுகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், இன்று காலை வள்ளுவர் நகர் அருகில் உள்ள பகுதிகளில் நாய், காகம், பூனை ஆங்காங்கே இறந்து கிடப்பதைப் பார்த்து மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதோடு, அருகில் உள்ள முள்புதரில் காட்டுப்பன்றி ஒன்றும் இறந்துகிடப்பதைக் கண்டுள்ளனர்.

coonoor dump yard
coonoor dump yard

பதறிய கிராம மக்கள், கால்நடை மற்றும் வனத்துறையினருக்கு தெரிவித்துள்ளனர். மண்டல கால்நடை துறை இணை இயக்குநர் டாக்டர் வேடியப்பன் தலைமையில், கால்நடை மருத்துவர்கள் இறந்துகிடந்த விலங்குகளின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வு மேற்கொண்டு, மாதிரிகளைச் சேகரித்தனர்.

``விஷம் கலக்கப்பட்ட உணவை உண்டு இந்த விலங்கு,பறவைகள் இறந்திருக்கக்கூடும். விசாரணை மேற்கொண்டுவருகிறோம். உடற்கூறாய்வு முடிவுகள் வந்தபிறகே விவரம் தெரியவரும்" என அதிகாரிகள் தெரிவித்தனர்.

coonoor dump yard
coonoor dump yard

ஊரடங்கால் நகர்ப் பகுதிகளில் வாழும் விலங்கினங்கள் உணவின்றித் தவித்து அலையும் சூழலில், அவை கூட்டம் கூட்டமாக செத்து மடிந்த சம்பவம், விலங்கு நேசர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.