Published:Updated:

​​தேனி​யில் ​உதவி வனப் பாதுகாவலரைத் தாக்கிய​ சிறுத்தை... நடந்தது என்ன?

சிறுத்தை

​சிறுத்தை ஒன்று விளைநிலத்தில் புகுந்து சோலார் வேலியில் சிக்கியபோது, அதை மீட்ட வன அதிகாரியைத் தாக்கிய சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​​தேனி​யில் ​உதவி வனப் பாதுகாவலரைத் தாக்கிய​ சிறுத்தை... நடந்தது என்ன?

​சிறுத்தை ஒன்று விளைநிலத்தில் புகுந்து சோலார் வேலியில் சிக்கியபோது, அதை மீட்ட வன அதிகாரியைத் தாக்கிய சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
சிறுத்தை

தேனி மாவட்டத்தை ஒட்டிய மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டு மாடு, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் உள்ளன. கோடைக்காலத்தின் போது வனவிலங்குகள் மலை காடுகளில் இருந்து கீழே இறங்குவது வழக்கமாக உள்ளது. இதில் மலையோரங்களில் உள்ள மா, தென்னை, வாழை உள்ளிட்ட தோப்புகளை குறிவைத்து யானைகள் இறங்குவதும், அப்போது யானைக்கும் மனிதனுக்குமான மோதல் ஏற்படுவதும் தொடர்கதையாக உள்ளது. ​இந்நிலையில், ​​சிறுத்தை ஒன்று விளைநிலத்தில் புகுந்து சோலார் வேலியில் சிக்கியபோது, அதை மீட்ட வனஅதிகாரியைத் தாக்கிய சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வனஅதிகாரி
வனஅதிகாரி

​தேனி மாவட்டம் பெரியகுளம் லட்சுமிபுரம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், தனியார் தோட்டம் அருகே வனத்துறை சார்பாக சோலார் வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிறுத்தை ஒன்று சோலார் வேலியில் சிக்கியுள்ளது. சிறுத்தையின் சத்தத்தைக் கேட்ட வனத்துறையினர், அதை மீட்பதற்காகத் தேனி மாவட்ட உதவி வனப் பாதுகாவலர் மகேந்திரன் தலைமையில் வனப்பகுதிக்கு விரைந்தனர். 

​அங்கு சென்று பார்த்தபோது, இரண்டு முதல் மூன்று வயதுடைய சிறுத்தையின் உடலில், சோலார் கம்பி சுற்றி இருந்ததைப் பார்த்து வனத்துறையினர் சிறுத்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக சோலார் வேலியில் இருந்து நன்கு மீண்ட சிறுத்தை எதிரே இருந்த உதவி வனப் பாதுகாவலர் மகேந்திரனை, கண் இமைக்கும் நேரத்தில் தாக்கிவிட்டு வனப்பகுதிக்குள் ஓடியது.

காயம்
காயம்

இதில் உதவி வனப் பாதுகாவலரின் இடது கையில் சிறுத்தை கடித்ததில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவரின் வயிற்றுப் பகுதியிலும் காயம் ஏற்பட்டது. காயமடைந்த உதவி வனப் பாதுகாவலரை மீட்டு சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

வன அதிகாரியை சிறுத்தை தாக்கிய சம்பவம் பெரியகுளம் பகுதி விவசாயிகளிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. ​​