Published:Updated:

நீலகிரி: யானையைத் தொடர்ந்து சிறுத்தை..! - கூடலூரில் தலைதூக்கும் துப்பாக்கி கலாசாரம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தோட்டத்தில் இறந்துகிடந்த சிறுத்தை
தோட்டத்தில் இறந்துகிடந்த சிறுத்தை

காலில் குண்டடி காயத்துடன் கூடலூரில் யானை ஒன்று இறந்துகிடந்ததைத் தொடர்ந்து தற்போது அதே பாணியில் சிறுத்தை ஒன்றும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நீலகிரி மாவட்டம், கூடலூர் அத்திக்குன்னா அருகிலுள்ள பாரி அக்ரோ தனியார் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று இறந்துகிடப்பதைக் கண்ட தோட்டத் தொழிலாளர்கள், வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

நிகழ்விடத்துக்கு வந்த வனத்துறை ஊழியர்கள் சிறுத்தை இறந்திருப்பதை உறுதிசெய்து, தங்கள் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

தோட்டத்தில் இறந்துகிடந்த சிறுத்தை
தோட்டத்தில் இறந்துகிடந்த சிறுத்தை

கால்நடை மருத்துவர்களுடன் வந்த வனத்துறை அதிகாரிகள், உடற்கூறாய்வை மேற்கொண்டனர். சிறுத்தையின் பின்னங்காலில் தோட்டா போன்ற ஒரு பொருள் துளைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சிறுத்தையின் உடலிலிருந்து ஆய்வு மாதிரிகளைச் சேகரித்தனர்.

சிறுத்தை இறப்பு குறித்து நம்மிடம் பேசிய கூடலூர் வனத்துறை அதிகாரி ஒருவர், ``தேயிலைத் தோட்டத்தில் இறந்துகிடந்தது ஓர் ஆண் சிறுத்தை. சுமார் 5 வயது இருக்கலாம். இதன் பின்னங்காலில் பிளாஸ்டிக் தோட்டா ஒன்று பாய்ந்திருக்கிறது. இரண்டு மூன்று நாள்களுக்குள் இந்தக் காயம் ஏற்பட்டிருக்கிறது. டைகர்‌ டிராக்கிங் டீம், மோப்ப நாய்கள், வனத்துறை சார்பில் மூன்று தனிக்குழு மற்றும் காவல்துறை உதவியுடனும் குற்றவாளியைத் தேடும் பணியில் ஈடுபட்டுவருகிறோம்" என்றார்.

தோட்டத்தில் இறந்துகிடந்த சிறுத்தை
தோட்டத்தில் இறந்துகிடந்த சிறுத்தை

இந்த நிகழ்வு குறித்து நம்மிடம் பேசிய காட்டுயிர் ஆர்வலர் ஜனார்த்தனன், ``கடந்த மாதம் கூடலூர் கரளிக்கண்டி பகுதியிலுள்ள நீரோடையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று காலில் குண்டடிக் காயத்துடன் இறந்துகிடந்தது. தற்போது அதேபாணியில் சிறுத்தையும் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறது. (Plastic Cartridge) பிளாஸ்டிக் வகை தோட்டாவையே இரண்டுக்கும் பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. வன விலங்குகளைச் சுட்டுக்கொல்லும் போக்கு மீண்டும் அதிகரித்திருப்பதை உடனடியாக ஒடுக்க வேண்டும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு