மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக் காளைக்கு கேக் வெட்டி, விருந்து வைத்து பிறந்தநாள் கொண்டாடி அசத்தியுள்ளனர் இளைஞர்கள்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஜல்லிக்கட்டுப் போட்டிக்குப் பிரபலமானது அலங்காநல்லூர்.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டபோது அதை எதிர்த்து மிகப்பெரிய போராட்டங்கள் தமிழகத்தில் நடந்தன. அதன் விளைவாக ஜல்லிக்கட்டு, நாட்டு மாடுகள் மீது இளைய தலைமுறையினருக்கு தீவிர ஈடுபாடு ஏற்பட்டது.
அந்த அடிப்படையில் பலர் காளைகளை வளர்த்து வருகிறார்கள். அலங்காநல்லூரில் லோகு என்ற இளைஞர் தலைமையில் 5 வருடங்களுக்கு முன் ஜல்லிக்கட்டுக்காகக் காளக்கன்றை வாங்கி சில இளைஞர்கள் வளர்க்க ஆரம்பித்தார்கள்.
கரிகாலன் எனப் பெயர் சூட்டப்பட்ட காளையை குழந்தையைப் போல் செல்லமாக வளர்த்து வருகிறார்கள்.

அதன் 5வது பிறந்த நாளை சீரும் சிறப்புமாகக் கொண்டாட முடிவு செய்தவர்கள், கரிகாலனை நன்றாக அலங்கரித்து அலங்காநல்லூர் முனியாண்டி கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பின்பு தயாராக வைக்கப்பட்டிருந்த கேக்கை வெட்டி கரிகாலனுக்கு ஊட்டி பிறந்தநாள் விழாவை வெகு சிறப்பாகக் கொண்டாடினார்கள். பின்னர், ஊர் மக்களுக்கு அசைவ உணவு தயார் செய்து வழங்கினார்கள்.

வளர்த்து வரும் ஜல்லிகட்டுக் காளைக் கன்றுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடிய சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.