Published:Updated:

மயிலாடுதுறை: செல்லபிராணி `சச்சின்' மரணம்; கல்லறை எழுப்பி அஞ்சலி செலுத்திய தம்பதி!

செல்லபிராணி 'சச்சின்' கல்லறை

"நாங்கள் செல்லமாக வளர்த்த சச்சின் புதைத்த இடத்தில், எங்கள் குழந்தைகளின் விருப்பப்படி, என்றும் நினைவாக இருக்கக் கல்லறை அமைக்கவிருக்கிறோம்" என்று தெரிவித்திருந்தனர் ஹரிபாஸ்கர் - கார்குழலி தம்பதியினர்.

மயிலாடுதுறை: செல்லபிராணி `சச்சின்' மரணம்; கல்லறை எழுப்பி அஞ்சலி செலுத்திய தம்பதி!

"நாங்கள் செல்லமாக வளர்த்த சச்சின் புதைத்த இடத்தில், எங்கள் குழந்தைகளின் விருப்பப்படி, என்றும் நினைவாக இருக்கக் கல்லறை அமைக்கவிருக்கிறோம்" என்று தெரிவித்திருந்தனர் ஹரிபாஸ்கர் - கார்குழலி தம்பதியினர்.

Published:Updated:
செல்லபிராணி 'சச்சின்' கல்லறை

இயந்திரத்தனமாய் இயங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட இன்றைய மனிதர்கள், மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனைப் போக்க வழிகள் இருந்தாலும், செல்லப்பிராணிகளுடன் நேரத்தைச் செலவிடும்போது அதிலிருந்து 'ரிலாக்ஸ்' ஆகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மகாதானபுரத்தைச் சேர்ந்த ஹரிபாஸ்கர் - கார்குழலி தம்பதியினர் இருவருக்குமே காவல்துறையில் வேலை. காவல் பணியாற்றும் இவர்களின் வீட்டையும், இரண்டு குழந்தைகளையும் பாதுகாப்பது இவர்கள் செல்லமாக வளர்க்கும் நாய்கள்தான். வீட்டில் 4 நாய்களை வளர்த்து, அவற்றிற்குச் செல்லப்பெயரிட்டு குழந்தைகளைப்போல வளர்த்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக 'சச்சின்' என்ற நாய் இவர்களுக்கு மிகவும் பிடித்தமாக  இருந்து வந்துள்ளது. தினசரி காலை 5.00 மணிக்கே வீட்டின் கதவைத் தட்டி, உரிமையாளர்களை எழுப்பிவிடும் சச்சின், வெளிக்கதவைத் திறந்துவிட்டதுமே நேராகச் செல்வது வீட்டின் அருகில் ஓடும் வாய்க்காலுக்குத்தான்.

செல்லபிராணி 'சச்சின்' கல்லறை
செல்லபிராணி 'சச்சின்' கல்லறை

அங்குச் சென்று உற்சாகக் குளியல் போட்டுவிட்டுத்தான் வீடு திரும்பும். சச்சின் குளித்துவிட்டு வரும்போது அப்பகுதியிலுள்ள டீக்கடைக்காரர் நாள் தவறாமல் கொடுக்கும் 'பன்'னை காலைச் சிற்றுண்டியாகச் சாப்பிட்டுவிட்டு, சாலையைக் கடந்து வீட்டுக்கு வரும்.

அதுபோல், கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி வாய்க்காலுக்குச் சென்று வீடு திரும்புகையில் சாலையைக் கடக்க முயன்றபோது, அப்பகுதி வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே சச்சின் பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து, சச்சினின் உடலை மீட்டு, நல்லடக்கம் செய்த ஹரிபாஸ்கர், சச்சினின் இறப்புக்கு இரங்கல் பேனரும் வைத்துள்ளார். அதில், "நாங்கள் செல்லமாக வளர்த்த சச்சின் புதைத்த இடத்தில், எங்கள் குழந்தைகளின் விருப்பப்படி, என்றும் நினைவாக இருக்கக் கல்லறை அமைக்கவிருக்கிறோம்" என்று தெரிவித்திருந்தார்.

செல்லபிராணி 'சச்சின்' கல்லறை
செல்லபிராணி 'சச்சின்' கல்லறை

அதன்படி ஹரிபாஸ்கர் - கார்குழலி தம்பதியினர் தற்போது சச்சின் புதைக்கப்பட்ட இடத்தில் கல்லறை ஒன்றை அமைந்துள்ளனர். இந்த நிகழ்வில் அப்பகுதியினர் கலந்துகொண்டு மலரஞ்சலி தூவி சச்சினுக்கு மரியாதை செய்தது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.