Published:Updated:

காவடி தாக்கியதில் பார்வையிழந்த கும்கி யானை; பணியிடை நீக்கம் செய்த அதிகாரிகள்; முதுமலை துயரம்!

கண் பார்வையிழந்த சேரன் கும்கி யானை
கண் பார்வையிழந்த சேரன் கும்கி யானை

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காட்டுயானை தாக்குதல் மற்றும் வலது கண்ணில் பரவிய புரை காரணமாக பார்வையிழப்பு ஏற்பட்டு, இடது கண்ணில் மட்டுமே பார்வை இருந்தது . தற்போது இடது கண் பார்வையும் காவடி தாக்கியதில் பறிபோயுள்ளது.

ஆசியாவில் உள்ள மிகப்பழைமையான வளர்ப்பு யானை முகாம்களில் ஒன்றாக முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் விளங்கி வருகிறது. முழுக்க முழுக்க பழங்குடிகளைக் கொண்டே இயங்கி வரும் இந்த யானைகள் முகாம், அங்குசம் பயன்படுத்தப்படாத ஒரே வளர்ப்பு யானைகள் முகாம் என்ற பெருமையும் பெற்றுள்ளது. இந்த முகாமில் தற்போது மொத்தம் 29 வளர்ப்பு யானைகளை பராமரித்து வருகின்றனர். கும்கிகளாகவும், வனத்தில் ரோந்து பணிக்காகவும், யானை சவாரி உள்ளிட்ட இதர தேவைகளுக்காகவும் இந்த யானைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம்
தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம்
தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக கோவையில் யானை பூங்கா; என்ன ஸ்பெஷல்? #SpotVisit

யானைகளின் `மஸ்த்' எனப்படும் மதங்கொண்ட காலங்களில் யானைகளை கட்டளைக்கு உட்படுத்தி கட்டுக்குள் கொண்டுவர பாகன் மற்றும் காவடிகள் கடுமையாக நடந்து கொள்கின்றனர். கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மதங்கொண்டிருந்த `ஜான்' என்ற கும்கி யானையைக் கட்டுப்படுத்த முடியாமல் யானையின் மீது கட்டை மற்றும் கற்களை வீசியெறிந்து கடுமையாக தாக்கினர். இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில்,முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் 35 வயது மதிக்கத்தக்க சேரன் என்ற கும்கி யானையை கடந்த சில தினங்களுக்கு முன்பு அதன் காவடி தாக்கியதில் அந்த யானையின் இடது கண்ணில் காயம் ஏற்பட்டு கண் பார்வை பாதிப்படைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காட்டுயானை தாக்குதல் மற்றும் வலது கண்ணில் பரவிய புரை காரணமாக பார்வையிழப்பு ஏற்பட்டு இடது கண் பார்வையை மட்டுமே சார்ந்திருந்தது. தற்போது இடது கண் பார்வையும் காவடி தாக்கியதில் பறிபோனது.

கண் பார்வையிழந்த சேரன் கும்கி யானை
கண் பார்வையிழந்த சேரன் கும்கி யானை
2 ஆண்டுகளுக்குப் பின் பிடிபட்ட `சில்வர் மான்ஸ்ட்ரா' யானை; சிகிச்சையைத் தொடங்கிய வனத்துறை!

இந்த துயரம் குறித்து நம்மிடம் பேசிய முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள், ``கடந்த மே 17-ம் தேதி பாகனின் உதவியாளரான முருகன் என்ற காவடி சேரன்‌ யானையைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். எதேச்சையாக யானையை தாக்கும்போது அது கண்ணில் பட்டு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இடது கண்ணில் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. யானையைத் தாக்கிய காவடியை பணியிடை நீக்கம் செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். யானைக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு