Published:Updated:

₹3.5 லட்சத்துக்கு விலை போன `பொன்ராம் கீரி' வகை சேவல்; திண்டுக்கல் சுவாரஸ்யம்!

சேவல்

கண்காட்சியில் கிளிமூக்கு, விசிறிவால், கருங்கீரி, செங்கீரி, மயில் கீரி, செம்பொன்ராம் உள்ளிட்ட 500 சேவல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. உடலமைப்பு, வாலின் நீளம், மூக்கின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த சேவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

₹3.5 லட்சத்துக்கு விலை போன `பொன்ராம் கீரி' வகை சேவல்; திண்டுக்கல் சுவாரஸ்யம்!

கண்காட்சியில் கிளிமூக்கு, விசிறிவால், கருங்கீரி, செங்கீரி, மயில் கீரி, செம்பொன்ராம் உள்ளிட்ட 500 சேவல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. உடலமைப்பு, வாலின் நீளம், மூக்கின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த சேவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

Published:Updated:
சேவல்

திண்டுக்கல் அருகே குட்டியபட்டியில் 7-வது ஆண்டு தேசிய அளவிலான சேவல் கண்காட்சி நடைபெற்றது. இதில் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான சேவல் பிரியர்கள் தாங்கள் வளர்க்கும் சேவல்களுடன் கண்காட்சியில் பங்கேற்றனர்.

இக்கண்காட்சியில் கிளிமூக்கு, விசிறிவால், கருங்கீரி, செங்கீரி, மயில் கீரி, செம்பொன்ராம் உள்ளிட்ட 500 சேவல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. உடலமைப்பு, வாலின் நீளம், மூக்கின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த சேவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. கண்காட்சியில் இடம் பெற்ற சேவல்கள் 20,000 ரூபாய் முதல் மூன்றரை லட்சம் வரை விலை போனது.

கண்காட்சி
கண்காட்சி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிளிமூக்கு, விசிறிவால் சேவல்களுக்கு வால் வித்தியாசமாக இருப்பதால் இந்த வகை சேவல்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. இந்தக் கண்காட்சியில் வால், மூக்கு, நெஞ்சு, ரெக்கை அமைப்பின் அடிப்படையில் 50 சிறந்த சேவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. முதலிடம் பிடித்த 25 சேவல்களுக்கு தலா ஒரு கிராம் தங்க நாணயங்கள், 2-ம் இடம் பிடித்த 25 சேவல்களுக்கு மிக்ஸி பரிசாக வழங்கப்பட்டன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சேவல் கண்காட்சியை ஒருங்கிணைந்த உலக சேவல் அமைப்பின் திண்டுக்கல் கிளை ஒருங்கிணைப்பாளர் நெல்சனிடம் பேசினோம். ``அழியும் தருவாயில் உள்ள நாட்டு சேவல்களை பாதுகாக்கும் நோக்கில்தான் தொடர்ந்து சேவல் காண்காட்சி நடத்தி வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழகத்தில் சேவல் சண்டைக்குத் தடை உள்ளதால், தற்போது சண்டை சேவல்கள் செல்லப்பிராணிகளாக வீடுகளில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும் வீரியமிக்க இந்தச் சேவல்களை வாங்க ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரியைச் சேர்ந்த சேவல் பிரியர்கள் அதிமாக கண்காட்சியில் கலந்துகொண்டனர்.

சேவல்கள்
சேவல்கள்

தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சேவல்கள் நல்ல உயரத்துடன் 10 கிலோ எடை வரை வளரக்கூடியதாக இருந்தன. தற்போது 4 முதல் 5 கிலோ எடை வரை வளர்வதே பெரிதாக உள்ளன. ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பர்ய விளையாட்டாக சேவல் சண்டை இருந்ததால்,தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வந்தது. அதனால், சேவல் சண்டையை சூதாட்டமின்றி, கத்திகளைப் பயன்படுத்தாமல் உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். அப்போதுதான் தமிழகத்தின் பாரம்பர்யமிக்க சேவல் இனங்கள் அழியாமல் இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு அடி அகலம் கொண்ட மூன்றடுக்கு வால், வாலில் சொருகும் அளவுக்கான ரெக்கை, சராசரியாக ஒன்றரை அடி உயரம், ஒரு அடி நெஞ்சு அகலம் கொண்ட சிறப்புகளைத் தமிழக சேவல்கள் கொண்டுள்ளன. இவ்வகையான சேவல்களுக்கு இயல்பாகவே வீரியம் மூர்க்கமாக சண்டையிடும் ஆற்றல் உள்ளது.

பரிசு பெற்ற சேவல்கள்
பரிசு பெற்ற சேவல்கள்

இந்தக் கண்காட்சியில் சேவல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. அதில் பல சேவல்கள் ரூ.20,000 முதல் விற்கப்பட்டன. அதிகபட்சமாக 2 அடி வால், நல்ல நெஞ்சு விரிப்பு, ஒரு அடி கழுத்து வாட்டம் போன்ற சிறப்புகளைக் கொண்ட பொன்ராம் கீரி வகை சேவல் மூன்றரை லட்சத்துக்கு விற்பனையானது. தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை உள்ளபோதும் இப்படி ஆண்டுதோறும் கண்காட்சி நடத்துவதன் மூலம் அரியவகை சேவல் இனங்கள் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றன'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism