Published:Updated:

கூரையைப் பிய்த்துக்கொண்டு வீட்டுக்குள் விழுந்த காட்டு மாடு; கதவை உடைத்து மீட்ட வனத்துறையினர்!

வீட்டிற்குள் விழுந்த காட்டுமாடு
வீட்டிற்குள் விழுந்த காட்டுமாடு

காட்டுமாடு ஒன்று தனது குட்டியுடன் மேய்ந்து கொண்டிருக்கையில், வீட்டின் கூரை மீது கால் வைத்துள்ளது. அப்போது கூரையைப் பிய்த்துக்கொண்டு தாய் காட்டுமாடு தீடீரென வீட்டிற்குள் விழுந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் காடுகளை இழந்து தவிக்கும் யானை, கரடி, காட்டுமாடு, சிறுத்தை போன்ற வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி தேயிலைத் தோட்டங்களிலிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தஞ்சம் புகுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.

வீட்டிற்குள் விழுந்த காட்டுமாடு
வீட்டிற்குள் விழுந்த காட்டுமாடு
2 நாள்களில் 3 மாடுகளைத் தாக்கிய புலி; 7 தானியங்கி கேமராக்களுடன் களமிறங்கிய வனத்துறை!

இந்நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள வெலிங்டன் நல்லப்பன் தெரு பகுதியில் காட்டுமாடு ஒன்று தனது குட்டியுடன் மேய்ச்சலில் ஈடுபட்டுள்ளது. மோகன் என்பவரது வீட்டருகில் மேய்ந்து கொண்டிருக்கையில், வீட்டின் கூரை மீது கால்வைத்துள்ளது. அப்போது கூரையைப் பிய்த்துக்கொண்டு தாய் காட்டுமாடு தீடீரென மோகனின் வீட்டிற்குள் விழுந்துள்ளது.

பின்னர் வனத்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்ட நிலையில், நிகழ்விடத்திற்கு வந்த குன்னூர் வனத்துறையினர், 2 மணி நேரம் போராடி தாய் காட்டுமாட்டை மீட்டு அருகில் தவித்துக் கொண்டிருந்த அதன் குட்டியிடம் சேர்த்தனர்.

வீட்டிற்குள் விழுந்த காட்டுமாடு
வீட்டிற்குள் விழுந்த காட்டுமாடு
கடுவன், காளிங்கன், அகவை; வனத்துறை குற்றங்களைத் தடுக்க களமிறங்கும் நாட்டு நாய் படை!

இந்த சம்பவம் குறித்து பேசிய குன்னூர் வனத்துறையினர், ``நல்ல வேளையாக வீட்டிற்குள் ஆட்கள் யாரும் இல்லை என்பதால் எந்த பாதிப்பும் இல்லை. வீட்டிற்குள் இருந்த சில பொருள்கள் சேதமடைந்துள்ளன. வீட்டின் உரிமையாளர் இழப்பீடு கேட்டுள்ளார். வீட்டின் கதவை உடைத்து காட்டுமாட்டை வெளியே மீட்டு குட்டியுடன் சேர்த்து வைத்தோம்"என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு