Published:Updated:

சபரிமலை சீசனால் மேகமலைக்கு படையெடுக்கின்றனவா யானைகள்? அதிகாரி கூறுவது என்ன?

யானைகள்
News
யானைகள்

கடந்த சில தினங்களாக 2 யானைகள், 2 குட்டி யானைகள் மேகமலை பகுதிகளில் உலா வந்து கொண்டிருக்கின்றன. இதை மேகமலைக்கு சுற்றுலா சென்ற பயணிகள் செல்போனில் விடியோ எடுத்து இணையத்தில் பரப்பினர்.

தேனி மாவட்டத்தில் மேகமலை சுற்றுவட்டாரப் பகுதிகள் ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பக எல்லைக்குள் வருகிறது. இப்பகுதிகளைச் சுற்றி ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் அடர்ந்த வனம் இருப்பதால் புலிகள், சிறுத்தைகள், கரடி, மான், காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.

சபரிமலை சீசனின் போது கேரள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து தமிழக ஹைவேவிஸ் வனப்பகுதியில் யானைக்கூட்டங்கள் இடம்பெயர்வு இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக 2 யானைகள், 2 குட்டி யானைகள் மேகமலை பகுதிகளில் உலா வந்து கொண்டிருக்கின்றன.

யானைகள்
யானைகள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதை மேகமலைக்கு சுற்றுலா சென்ற பயணிகள் செல்போனில் விடியோ எடுத்து இணையத்தில் பரப்பினர். இதையடுத்து சபரிமலை சீசன் காரணமாக கேரள வனப்பகுதிகளில் இருந்து யானைக் கூட்டங்கள் மேகமலை வனப்பகுதிக்குள் வந்துள்ளதாகவும், ஹைவேவிஸ் மலை கிராமங்களில் வாழும் 8 ஆயிரம் தோட்டத் தொழிலாளிகள் அச்சத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆனந்திடம் கேட்டோம். ``மேகமலை பகுதியில் வழக்கமாக நடமாடும் யானை குடும்பம்தான் உள்ளது. இடபெயர்வால் பெரும் கூட்டம் மேகமலை பகுதிக்கு வரவில்லை. மேகமலைக்கு சுற்றுலா சென்ற பயணிகள் அந்த ஒரு யானை குடும்பத்தை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பரப்பியதால், வீண் வதந்தி ஏற்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. மேலும் சபரிமலை சீசன் காரணமாகத்தான் யானைகள் இடப்பெயர்வு செய்கின்றன எனக் கூறுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

யானைகள்
யானைகள்

அதை உறுதி செய்ய ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். அந்தப் பகுதி இயல்பாகவே யானைகள் வலசை செல்லும் வழித்தடம் தான். யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றனர். யானைக் கூட்டம் வருவதாக இருந்தால், அருகே வசிக்கும் மக்களை பாதுகாப்பதற்கு உரிய அறிவிப்பு கொடுத்து பாதுகாப்பு வழங்கப்படும். கடந்த 2015-க்கு பிறகு யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. விரைவில் கணக்கெடுப்பு நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன'' என்றார்.