Published:Updated:

நீலகிரி: பிடிபட்ட `உடைந்த கொம்பன்’ யானை! - முடிவுக்கு வந்த இரண்டு மாதப் போராட்டம்

யானை

மனிதர்களைத் தாக்கும் சுபாவம்கொண்டதாக வனத்துறையினரால் அறிவிக்கப்பட்டு, கடந்த இரண்டு மாதங்களாகத் தேடப்பட்டுவந்த, `உடைந்த கொம்பன்' காட்டுயானையை இன்று மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.

நீலகிரி: பிடிபட்ட `உடைந்த கொம்பன்’ யானை! - முடிவுக்கு வந்த இரண்டு மாதப் போராட்டம்

மனிதர்களைத் தாக்கும் சுபாவம்கொண்டதாக வனத்துறையினரால் அறிவிக்கப்பட்டு, கடந்த இரண்டு மாதங்களாகத் தேடப்பட்டுவந்த, `உடைந்த கொம்பன்' காட்டுயானையை இன்று மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.

Published:Updated:
யானை

நீலகிரி மாவட்டம், பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாகமுத்து, ஆனந்தராஜ், அவருடைய மகன் பிரசாந்த் ஆகிய மூவரும் காட்டுயானை தாக்கி அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

யானை
யானை

இந்த மூன்று பேரையும் குறிப்பிட்ட ஒரு காட்டுயானையே தாக்கியிருக்கிறட்து என்பதை வனத்துறையினர் விசாரணையில் உறுதி செய்தனர். `உடைந்த கொம்பன்’, `ஷங்கர்’ ஆகிய பெயர்களில் உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் இந்தக் காட்டுயானையைப் பிடித்து முதுமலையிலுள்ள வளர்ப்பு யானைகள் முகாமுக்குக் கொண்டு செல்ல முடிவு செய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டிசம்பர் மாதத்தில் இந்த யானையை கும்கிகள் உதவியுடன் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது துப்பாக்கி மூலம் யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. ஆனாலும் வனத்துறையினரிடம் சிக்காமல் அடர்ந்த கேரள வனப்பகுதிக்குள் தப்பியது.

யானை
யானை

இந்தநிலையில், இந்த யானை தமிழக எல்லையான சப்பந்தோடு வனப்பகுதிக்கு மீண்டும் திரும்பியது. யானையைப் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். நேற்று முன்தினம் புஞ்சைக்கொல்லி வனப்பகுதிக்குள் முகாமிட்டிருந்த இந்த யானைக்கு கால்நடை மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்தினர். அப்போது இரண்டாவது முறையாகத் தப்பியது.

தேடுதலைத் தீவிரப்படுத்திவந்த நிலையில், இன்று மதியம் சேரம்பாடி வனப்பகுதியில் யானை இருப்பதை உறுதி செய்த கால்நடை மருத்துவர்கள், இரண்டு முறை மயக்க ஊசி செலுத்தி அதைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். கைதேர்ந்த வனத்துறை ஊழியர்களைக்கொண்டு யானையை வாகனத்தில் ஏற்றும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

யானை
யானை

இது குறித்து வனத்துறையினர், ``இரண்டு மாதங்களாக இந்த யானையைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவந்தோம். கடும் சிரமத்துக்குப் பிறகு உடைந்த கொம்பன் இன்று பிடிபட்டான். இரண்டு மாதப் போராட்டம் முடிவுக்கு வந்தது’’ என்றனர்.

மனிதர்களை தாக்கும் சுபாவம் கொண்டதாக வனத்துறையினரால் அறிவிக்கப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக தேடப்பட்டு வந்த ,'உடைந்த...

Posted by Junior Vikatan on Friday, February 12, 2021