Published:Updated:

காளை வடிவில் பாரம்பர்ய நெல் சாகுபடி!

காளை வடிவில் இயற்கை விவசாயம்

உழவுக்கு உற்ற தோழனாக இருக்கும் மாடுகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாகவும் தனது ஒரு ஏக்கர் நிலத்தில் அரிய வகை ரகமான சின்னார் என்ற சிவப்பு பாரம்பர்ய நெல் ரகத்தை காளை வடிவில் பயிரிட்டுள்ளார்.

காளை வடிவில் பாரம்பர்ய நெல் சாகுபடி!

உழவுக்கு உற்ற தோழனாக இருக்கும் மாடுகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாகவும் தனது ஒரு ஏக்கர் நிலத்தில் அரிய வகை ரகமான சின்னார் என்ற சிவப்பு பாரம்பர்ய நெல் ரகத்தை காளை வடிவில் பயிரிட்டுள்ளார்.

Published:Updated:
காளை வடிவில் இயற்கை விவசாயம்

பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக ஒரு ஏக்கர் பரப்பளவில் காளை மாட்டின் ஓவியத்தை வரைந்து, அந்த வடிவில்  விவசாயம் செய்திருக்கும் விவசாயிக்கு பாராட்டுகள் குவிகின்றன.

வேணு.காளிதாஸ்
வேணு.காளிதாஸ்

நாகப்பட்டினம் மாவட்டம் நீர்மூளை அருகேயுள்ள மாறாச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் வேணு.காளிதாஸ். இயற்கை விவசாயியான இவர் பாரம்பரிய நெல் ரகத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும், உழவுக்கு உற்ற தோழனாக இருக்கும் மாடுகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாகவும்  தனது  ஒரு ஏக்கர் நிலத்தில்  அரிய வகை ரகமான சின்னார் என்ற சிவப்பு பாரம்பர்ய நெல் ரகத்தை காளை வடிவில் பயிரிட்டுள்ளார். அதனைச் சுற்றி மாடுகளுக்கு தீவனமாக பயன்படும் குதிரைவாலி வளர்த்து, அவற்றை பிரம்மாண்ட ஓவியமாக படைத்துள்ளார்.

115 நாள் வயதுடைய குறுவை பயிரான சின்னார் என்ற பாரம்பரிய ரகம் மருத்துவ குணம் உடையது.  சிகப்பு நிற கதிர்களை உடைய இந்தப் பயிர் மழை வெள்ளத்தினால் கீழே சாயாத தன்மையுடையது. தற்போது அந்தப் பயிர்கள் நன்கு வளர்ந்த நிலையில் உயரத்தில் இருந்து பார்த்தால் காளை உருவம் தெரிகிறது.

காளை வடிவில் இயற்கை விவசாயம்
காளை வடிவில் இயற்கை விவசாயம்

இதனை ட்ரோன் உதவியுடன் ஆகாயத்திலிருந்து படமாக்கியுள்ளார். வயல்வெளிகள், வீடுகள், குளங்கள் இவற்றுக்கு நடுவே தெரியும் பசுமையான காளை  ஓவியம் அனைவரின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது.