Published:Updated:

காணாமல் போன பூனை; மச்சத்தை வைத்து கண்டுபிடிக்கப் பட்ட சுவாரஸ்யம்!

பூனை
News
பூனை

``என் பொண்ணுங்களும், என் மனைவியும் அது காணாமப் போன அன்னைக்கு சாப்பிடவே இல்ல. அவங்க கஷ்டப்படுறதப் பார்த்துதான் பூனையைக் காணோம்னு போஸ்டர் அடிச்சு ஒட்டுனோம். நவம்பர் 29-ம் தேதி கதவு திறந்திருந்துச்சு. எல்லாரும் வீட்டுக்கு உள்ள இருந்தோம். அப்போதான் வீட்டைவிட்டு வெளியில ஓடிடுச்சு."

கடந்த வாரம் சோஷியல் மீடியாவில் ஒரு போஸ்டர் வைரலானது. பூனையைக் காணவில்லை என்ற தலைப்பிட்ட அதில் கோல்டன் நிறத்தில் புசு புசுவென்ற பூனைப் படம் இடம்பெற்றிருந்தது. அதில் பெயர் ஜெசி, வயது 6 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நவம்பர் 29-ம் தேதி முதல் காணவில்லை என்றும் அதைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு 5,000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் ஹைலைட் என்னவென்றால் பூனைக்கு அடையாளம் என்று குறிப்பிட்டு உதட்டில் மச்சம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து அந்தப் பூனையின் உரிமையாளரான கோவையைச் சேர்ந்த கிருபாகரனைத் தொடர்புகொண்டு விசாரித்தோம். ``6 வருஷமா எங்க வீட்லதான் ஜெசி வளருது. ஒரு மனுஷனைப் போலத்தான் அதுவும் எங்களுக்கு. ஆஸ்திரேலிய வகை பூனை அது. ஜெசி காணாமப் போனதும் வீடே ஸ்தம்பிச்சிருச்சு.

பூனை
பூனை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

குறிப்பா காலேஜ் படிக்கிற என் ரெண்டு பொண்ணுங்களும், என் மனைவியும் அது காணாமப் போன அன்னைக்கு முழுசும் சாப்பிடவே இல்ல. அவங்க அப்படி கஷ்டப்படுறதைப் பார்த்துதான் பூனையைக் காணோம்னு போஸ்டர் அடிச்சு ஒட்டுனோம்.

நவம்பர் 29-ம் தேதி கதவு திறந்திருந்துச்சு. எல்லாரும் வீட்டுக்கு உள்ள இருந்தோம். அப்போதான் வீட்டைவிட்டு வெளியில ஓடிடுச்சு. அதைப் பார்த்த எதிர்வீட்டுக்காரர் எங்க ஏரியால இருக்குற ஒரு பொண்ணுகிட்ட கொடுத்துட்டாரு. அந்தப் பொண்ணு ஜெசியை ஒரு அலமாரியில போட்டு அடைச்சு வெச்சிருக்காங்க. குடிக்க பால் குடுத்திருக்காங்க. எங்க ஜெசி கடையில விக்குற பூனைகளுக்கான ஃபுட் மட்டும்தான் சாப்பிடும். அதனால அந்தப் பாலைக் குடிக்கவே இல்லையாம்" என்று சொல்லும்போதே அவர் குரல் உடைகிறது.

தொடர்ந்து பேசிய கிருபாகரன், ``ஒருகட்டத்துல அந்தப் பொண்ணோட வீட்லேயிருந்தும் ஜெசி தப்பிச்சு ஒரு சர்ச் வாசல்ல படுத்திருந்திருக்கு. அதைப் பார்த்த ஸ்டீபன் என்ற நபர் ஜெசியை எடுத்து கோபிச்செட்டிபாளையத்துல இருக்கிற அவரோட சித்தி வீட்டுக்குக் குடுத்தனுப்பிருக்காரு. பாவம், எங்ககிட்ட வர்ற வரைக்கும் கிட்டத்தட்ட 10 நாளா ஜெசி சரியாவே சாப்பிடலையாம். நாலஞ்சு நாள் கழிச்சு அவரோட ஸ்கூல் ஃபிரெண்ட் இருக்கிற ஒரு வாட்ஸ்அப் குரூப்ல ஜெசியைக் காணோம்னு நான் குடுத்த விளம்பரத்தைப் பார்த்திருக்காரு. அதுக்கப்புறம்தான் அவரு என்னோட ஸ்கூல் ஜூனியர்னு தெரியும்.

விளம்பரத்துல உதட்டுல மச்சம்னு அடையாளத்தோட இருந்ததால, தன்னோட சித்தி வீட்டுக்கு குடுத்தனுப்புன பூனைதான் இதுன்னு புரிஞ்சிருச்சு. அதுக்கப்புறம் என்னை தொடர்புகொண்ட ஸ்டீபன், ஜெசி அவங்ககிட்டதான் இருக்குன்னும், உடனே ஒப்படைக்கிறேன்னும் சொன்னாரு.

பூனை
பூனை

அந்த நிமிஷம் நான் அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்ல. உடனே என் பொண்ணுங்களுக்குத் தகவல் சொன்னேன். அவங்களுக்கும் சந்தோஷத்துல தலைகால் புரியல. அவரு ஜெசியைக் கொண்டுவந்து குடுத்ததும் அறிவிச்சபடி 5,000 ரூபாயையும் கொடுத்திட்டேன்" என்று மகிழ்ச்சியுடன் சொல்பவர், ஆஸ்திரேலியரகப் பூனை என்பதால், ஜெசிக்கு மாதத்துக்கு 1,700 ரூபாய் வரை செலவு செய்கிறாராம்.