Published:Updated:

கிரகணத்தால் உயிரிழந்தனவா மயில்கள்?- கோவை பகீர்

சூரிய கிரகணத்தின்போது, கோவையில் ஐந்து மயில்கள் உயிரிழந்துள்ளன.

கிரகணம்
கிரகணம்

அரிய வானியல் நிகழ்வான வளைய சூரிய கிரகணம் நடந்து முடிந்துள்ளது. பல்வேறு அரிய நிகழ்வுகள் இதில் நடந்து முடிந்துள்ள நிலையில், கோவை காந்திபுரம் அருகே ஐந்து மயில்கள் இறந்துள்ளன.

மயில்கள்
மயில்கள்

கிரகணம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் மயில்கள் இறந்துள்ளன.

இதுகுறித்து, திருப்பூர் இயற்கைச் சங்கத்தின் தலைவர் ரவீந்திரன், ``வானில் நிலவும் மாற்றங்களை பறவைகளால் நன்கு உணர முடியும். வெளிச்சம் குறைந்து, சற்று இருட்டடித்தாலும் தங்களது கூடுகளை தேடிச் சென்றுவிடும்.

ரவீந்திரன்
ரவீந்திரன்

பெரும்பாலும் மாலை நேரத்திலேயே இந்த நிகழ்வு நடைபெறும். கிரகணமும் அப்படித்தான். கடந்த கிரகணத்திலும் ஆய்வு செய்தோம். இந்த கிரகணத்திலும் ஆய்வு செய்தோம்.

கிரகணம் தொடங்கும்போது பறவைகள் ஒருவிதமான ஒலியை எழுப்பின. கிரகணம் நடந்துகொண்டிருக்கும்போது எந்தப் பறவையும் வெளியில் காண முடியவில்லை. வானில் திடீரென்று ஏற்படும் இந்த மாற்றத்தால் பதற்றமும், பயமும் அடையும். எளிய இதயத்தைக்கொண்ட பறவைகள் இறந்து போவதற்கும் வாய்ப்புள்ளது.

கிரகணம்
கிரகணம்

நம் ஊரில் மயில்களுக்குப் பல்வேறு ஆபத்துகள் இருக்கின்றன. பல இடங்களில் விஷம் வைக்கின்றனர். எனவே, வேறு காரணங்களாலும் மயில் இறந்திருக்கலாம்” என்றார். மயில்களின் உடல்களை மீட்டு வனத்துறை பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.