Published:Updated:

துப்பாக்கியைத் தவிர வேறுவழியில்லை... தெருநாய்களிடம் இருந்து பாதுகாப்பைத் தேடும் கேரள மக்கள்!

தெரு நாய்கள்

எங்கள் பகுதியில் தெருநாய்களால் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லவே மக்கள் பயப்படுகின்றனர். எனவே, ஏர் கன்னுடன் அவர்களை அழைத்துச் செல்கிறேன், அதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

துப்பாக்கியைத் தவிர வேறுவழியில்லை... தெருநாய்களிடம் இருந்து பாதுகாப்பைத் தேடும் கேரள மக்கள்!

எங்கள் பகுதியில் தெருநாய்களால் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லவே மக்கள் பயப்படுகின்றனர். எனவே, ஏர் கன்னுடன் அவர்களை அழைத்துச் செல்கிறேன், அதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

Published:Updated:
தெரு நாய்கள்

தெரு நாய்கள் துரத்திக் கடிப்பது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதிலும், கேரளாவில் நடப்பதாகக் கேள்விப்படும் பல நாய்க்கடி காட்சிகள் இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகின்றன.

சிறுவர்களை நாய் துரத்தித் துரத்திக் கடித்து குதறும் காட்சிகளும், நடந்து செல்பவர்களை கூட்டம் கூட்டமாகத் தெரு நாய்கள் துரத்திக் கடிக்கும் வீடியோ கட்சிகளும் பார்ப்பவர்களைப் பதற வைக்கின்றன.

தெருக்களில் திரியும் நாய்
தெருக்களில் திரியும் நாய்

சமீபத்தில், சைக்கிளில் சென்ற சிறுவனை, ஒரு நாய் விடாமல் விரட்டிச் சென்று கடித்தது. அதேபோல், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது தெருநாய் பாய்ந்து அவனைக் கண்டபடி கடித்துக் குதறியது. இப்படி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நாய்க்கடியால் பாதிக்கப்படுவது அதிகரித்தவண்ணம் உள்ளது.

அரசாங்கம், அமைச்சர், நீதிமன்றம் எனப் பலவழிகளில் இதற்கு தீர்வு கிடைக்காதா என மக்களும் எதிர்பார்த்து வந்தனர். இது குறித்து கேரள நீதி மன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் தெருநாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் சாலைகளில், தெருக்களில் நடந்து செல்ல மக்களிடம் அச்சம் அதிகரித்துள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள் தெருநாய்களால் மிகவும் பயந்துகொண்டே செல்கின்றனர்.

சமீர்
சமீர்

நிலைமை இப்படி மோசமாகிப் போனதால், கேரளாவில் உள்ள காசர்கோடு அருகே, சமீர் என்பவர் தெரு நாய்களிடம் இருந்து பள்ளிக் குழந்தைகளைக் காப்பாற்ற, கையில் துப்பாக்கியை ஏந்திச் சென்றுள்ளார். ஏர் கன்னை ஏந்தியபடி பள்ளிக் குழந்தைகளை அவர் அழைத்துச் செல்லும் அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக சமீர் கூறுகையில், ``எங்கள் பகுதியில் தெருநாய்களால் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.  குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லவே மக்கள் பயப்படுகின்றனர். எனவே ஏர் கன்னுடன் அவர்களை அழைத்துச் செல்கிறேன், அதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. இதனால் ஏற்படும் சட்டரீதியான நடவடிக்கை குறித்து எனக்கு பயமில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.