Published:Updated:

செல்லப் பிராணிகளை விற்பனை செய்வோர், அரிய பறவைகள் வளர்ப்போர் லைசென்ஸ் வாங்க வேண்டும்; வனத்துறை!

செல்லப்பிராணிகள்

அரிய வகை உயிரினங்களை வளர்ப்பதாகக் கூறி அவற்றை கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருவதால், அவர்களின் மீது வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

செல்லப் பிராணிகளை விற்பனை செய்வோர், அரிய பறவைகள் வளர்ப்போர் லைசென்ஸ் வாங்க வேண்டும்; வனத்துறை!

அரிய வகை உயிரினங்களை வளர்ப்பதாகக் கூறி அவற்றை கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருவதால், அவர்களின் மீது வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Published:Updated:
செல்லப்பிராணிகள்

செல்லப்பிராணிகளை விற்பனை செய்யும் கடை நடத்துவோர், வீடுகளில் வெளிநாட்டு பறவைகள் மற்றும் வன உயிரினங்களை வளர்ப்போர் கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

அதாவது, அரிய வகை உயிரினங்களை வளர்ப்பதற்கு சட்டப்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. அரிய வகை உயிரினங்களை வளர்ப்பதாகக் கூறி அவற்றை கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருவதால், அவர்களின் மீது வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வெளிநாடுகளில் வெவ்வேறு தட்பவெப்ப சூழ்நிலையில் வளரும் அரிய வகை பறவைகளை கொண்டு வந்து வீடுகளில் வளர்க்கின்றனர். செல்லப் பிராணிகள் விற்பனை செய்யும் கடை நடத்துவோரும் உரிமம் இல்லாமல் கடையை நடத்துகின்றனர். அவற்றை ஒழுங்குபடுத்தி, உரிமம் வழங்க வனத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பூனை
பூனை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெளிநாட்டு வன உயிரினங்கள் வளர்ப்போர் மற்றும் செல்லப்பிராணிகள் கடை நடத்துவோர் www.parivesh.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, இதற்கான உரிமம் வாங்க வேண்டும். செல்லப்பிராணிகளை வைத்திருக்கும் கடை மற்றும் வீடுகளில் நல்ல காற்றோட்ட வசதியோடு, சுகாதாரமாக இருக்க வேண்டும். இவற்றை வன உயிரின பாதுகாப்புக் குழு ஆய்வு செய்த பின்னர், உரிமம் வழங்க பரிந்துரை செய்யப்படும். மேலும், இது குறித்த தகவலை தெரிந்துகொள்ள 044 - 2220 0335 என்ற எண்ணில் தொடர்புகொண்டும் பேசலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism