Published:Updated:

665 காளைகள் சீறிப்பாய்ந்த வன்னியன் விடுதி கிராம ஜல்லிக்கட்டு... 13 காளைகளை அடக்கிய இளைஞர்!

வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு

3வது சுற்றில் மட்டும் 13 காளைகளை அடுத்தடுத்து அடக்கிய ஆனந்த், பொதுமக்களின் கரகோஷங்களைப் பெற்றதோடு, தங்கக்காசு, வெள்ளிக்காசு, ரொக்கப்பரிசு, பரிசுப்பொருள்களையும் அள்ளிக்குவித்தார்.

665 காளைகள் சீறிப்பாய்ந்த வன்னியன் விடுதி கிராம ஜல்லிக்கட்டு... 13 காளைகளை அடக்கிய இளைஞர்!

3வது சுற்றில் மட்டும் 13 காளைகளை அடுத்தடுத்து அடக்கிய ஆனந்த், பொதுமக்களின் கரகோஷங்களைப் பெற்றதோடு, தங்கக்காசு, வெள்ளிக்காசு, ரொக்கப்பரிசு, பரிசுப்பொருள்களையும் அள்ளிக்குவித்தார்.

Published:Updated:
வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வன்னியன் விடுதி கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர், மாயன்பெருமாள் கோயில் திடலில் 62ம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியை, அமைச்சர்கள் ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துவக்கி வைத்தனர். மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, எஸ்பி நிஷா பார்த்திபன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 700 காளைகள் பதிவு செய்யப்பட்டன. இதில், 665 காளைகள் வாடிவாசலில் அவிழ்த்துவிடப்பட்டன. நான்கு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் 250 வீரர்கள் கலந்துகொண்டனர்.

வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு
வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு

வாடிவாசல் வழியாகச் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு அடக்க முயன்றனர். பல காளைகள் களத்தில் நீண்ட நேரம் விளையாடி வீரர்களுக்குப் போக்கு காட்டியது. மாடுபிடி வீரர்கள் பலரும் அச்சத்தில் ஒதுங்கித் தடுப்புக் கம்பிகளின் மீது ஏறி நின்றனர். ஒரு சிலர் மட்டுமே தொடர்ந்து காளைகளை அடக்க முயன்றனர். அடக்க முயன்ற அவர்களையும் காளைகள் தூக்கி வீசிப் பந்தாடியது. வீரர்கள் 15 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 14 பேர், பார்வையாளர்கள் 34 பேர் என மொத்தம் 63 பேர் காயமடைந்தனர். அருகிலேயே மருத்துவக் குழு அமைக்கப்பட்டு, காயமடைந்தவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. படுகாயமடைந்த 11 பேர் மேல் சிகிச்சைக்காக ஆலங்குடி, புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

போட்டியின் முடிவில், 13 காளைகளை அடக்கிய தஞ்சாவூரைச் சேர்ந்த ஆனந்த்துக்குத் தங்க மோதிரமும், சுழற்கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டன. 9 காளைகளை அடக்கிய சூரியூர் சிவா இரண்டாவது இடமும், 7 காளைகளை அடக்கிய பள்ளத்துப்பட்டி சுப்பிரமணி 3வது இடமும் பிடித்துத் தங்கக்காசுகளைப் பரிசாக வென்றனர். வெற்றி பெற்ற காளைகளுக்கும், வீரர்களுக்கும் தங்கக்காசு, வெள்ளிக்காசு, ரொக்கப்பரிசு மற்றும் அண்டா, குக்கர் உள்ளிட்ட ஏராளமான பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. மாவட்ட எஸ்பி தலைமையில் 200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக மதியம் 12 மணியிலிருந்து 6 மணி வரையிலும் ஆலங்குடி சுற்றுவட்டார டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

3வது சுற்றில் மட்டும் 13 காளைகளை அடுத்தடுத்து அடக்கிய ஆனந்த், பொதுமக்களின் கரகோஷங்களைப் பெற்றதோடு தங்கக்காசு, வெள்ளிக்காசு, ரொக்கப்பரிசு, பரிசுப்பொருள்களையும் அள்ளிக்குவித்தார்.

ஆனந்த்
ஆனந்த்

முதல்பரிசு பெற்ற மகிழ்ச்சியிலிருந்த ஆனந்த்திடம் பேசினோம்,

"தஞ்சாவூர் பக்கத்துல திருக்கானூர்தான் சொந்த ஊரு. 2017ல்ல மாமாவோட மாட்டை, மாட்டோட உரிமையாளரா இருந்து களத்துல இறக்கினேன். அதற்கப்புறம்தான் ஜல்லிக்கட்டு மேலயே எனக்கு ஆர்வம் வந்துச்சு. தீவிரமா பயிற்சி எடுத்தேன். 2020ல்ல எங்க சொந்த ஊர் திருக்கானூர்ல நடந்த ஜல்லிக்கட்டுல 16 காளைகளை அடக்கி மொத பரிசு எடுத்தேன். கறம்பக்குடி ரகுநாதபுரத்திலும் பரிசு வாங்குனேன். இப்ப 13 காளைகளை அடக்கி மொத பரிசு எடுத்திருக்கேன். ஒரு வீரனுக்கு, எல்லா விதத்திலும் சக வீரர்களோட ஒத்துழைப்பு கிடைக்கிறது ரொம்ப முக்கியம். வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டுல எனக்கு ரொம்ப நல்லாவே கிடைச்சது. அதுதான் என்னோட வெற்றிக்குக் காரணம்" என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism