Published:Updated:

உடலைச் சுற்றிய மலைப்பாம்பு... பாம்பு பிடிக்க வந்தவருக்கு நேர்ந்த கதி!

மீட்புப் பணியில் தீயணைப்புத் துறையினர்

கிணற்றின் அருகே பதுங்கி இருந்த மலைப்பாம்பை சாதாரணமாக நினைத்த நடராஜன் கைகளால் பிடித்துள்ளார். அப்போது அந்த மலைப்பாம்பு தன்னுடைய உடலால் நடராஜனை சுற்ற ஆரம்பித்தது. அவர் சுதாரிப்பதற்குள் கழுத்து, உடம்பு, கால்களை சுற்றி இறுக்கிவிட்டது.

உடலைச் சுற்றிய மலைப்பாம்பு... பாம்பு பிடிக்க வந்தவருக்கு நேர்ந்த கதி!

கிணற்றின் அருகே பதுங்கி இருந்த மலைப்பாம்பை சாதாரணமாக நினைத்த நடராஜன் கைகளால் பிடித்துள்ளார். அப்போது அந்த மலைப்பாம்பு தன்னுடைய உடலால் நடராஜனை சுற்ற ஆரம்பித்தது. அவர் சுதாரிப்பதற்குள் கழுத்து, உடம்பு, கால்களை சுற்றி இறுக்கிவிட்டது.

Published:Updated:
மீட்புப் பணியில் தீயணைப்புத் துறையினர்

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே மேல்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சின்னசாமி. ஊருக்குள் வந்த 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு இவருடைய விவசாய நிலத்தில் புகுந்தது. அங்கிருந்த ஆட்டுக்குட்டியை பிடித்து விழுங்கியது.

மலைப்பாம்பை பார்க்க வந்த கூட்டம்
மலைப்பாம்பை பார்க்க வந்த கூட்டம்

ஆட்டுக்குட்டியை விழுங்கிய மலைப்பாம்பு அப்படியே தோட்டத்தில் உள்ள கிணற்று அருகில் பதுங்கிக்கொண்டது. இதை கண்டு பயந்த சின்னசாமி, அந்த மலைப்பாம்பை பிடிப்பதற்காக, பனகமுட்லு கிராமத்தைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் தொழிலாளி நடராஜன் (வயது 50) என்பவரை அழைத்து வந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கிணற்றின் அருகே பதுங்கி இருந்த மலைப்பாம்பை சாதாரணமாக நினைத்த நடராஜன் கைகளால் பிடித்துள்ளார். அப்போது அந்த மலைப்பாம்பு தன்னுடைய உடலால் நடராஜனை சுற்றி வளைக்க ஆரம்பித்தது. அவர் சுதாரிப்பதற்குள் கழுத்து, உடம்பு, கால்களைச் சுற்றி இறுக்கிவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த நடராஜன் மலைப்பாம்பிடம் இருந்து தப்பிக்க போராடினார். மலைப்பாம்பு அவரை விடாமல், மேலும் இறுக்கியது.

பாம்புடன் தரையில் உருண்டு போராடியபோது அருகே இருந்த 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தார். பாம்பும் அவரோடு சேர்ந்து கிணற்றுக்குள்ளே விழுந்தது.

மீட்புப் பணியில் தீயணைப்புத் துறையினர்
மீட்புப் பணியில் தீயணைப்புத் துறையினர்

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சின்னசாமி, கிருஷ்ணகிரி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கயிற்றை உடலில் கட்டிக்கொண்டு கிணற்றில் இறங்கினர், தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் நடராஜனை மீட்டனர். நடராஜனை இறுக்கிய மலைப்பாம்பு கிணற்றின் ஓரத்தில் உள்ள குழியில் பதுங்கி இருப்பதைக் கண்டனர்.

நடராஜனின் உடலைக் கயிறு கட்டி தீயணைப்பு துறையினர் மீட்டு, மேலே கொண்டு வந்தனர். உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர்
மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர்

காவேரிப்பட்டணம் கிணற்றில் பதுங்கி இருக்கும் மலைப்பாம்பை பிடித்து அப்புறப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

பாம்பு பிடிப்பதில் நீண்டகாலம் அனுபவம் கொண்டவர் நடராஜன். பாம்பு பிடிப்பது போக மற்ற நேரங்களில் கூலி வேலைக்குச் சென்று வந்துள்ளார். முதல் தடவையாக அவர் தவறுதலாக மாட்டிக்கொண்டது இந்த மலைப்பாம்பிடம்தான். நடராஜனுக்கு மனைவி, 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அவருடைய இறப்பு என்பது அவர்கள் குடுபத்துக்கு பெரும் இழப்பாகும். வழக்கமாக நாகப் பாம்பு, விரியன் போன்ற விஷமுள்ள பாம்புகளிடம் கடி பட்டு இறப்போரை பார்த்திருப்போம். ஆனால், வெகு அரிதாக மலைப்பாம்பு ஆளைச் சுற்றி அது இறப்பு வரை கொண்டு போய் விட்டிருப்பது, பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.