Published:Updated:

`பெருமையை தேடித்தந்தான்; இனி ஓய்வெடுக்கப் போறான்!' - காளைக்கு கள ஓய்வு விழா நடத்திய உரிமையாளர்

சேவுகா காளை
News
சேவுகா காளை

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்தவர் ஜெயந்தன். ஒரு காளைக்கு `சேவுகா' என்று பெயரிட்டு 15 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். மஞ்சு விரட்டு களத்தில் `சேவுகா' பெற்ற வெற்றிகள் ஏராளம் என்கிறார்கள். களத்தில் இறங்கியவுடன் களமாடும் வீரர்களின் தன்மைக்கு ஏற்ப விளையாடுமாம்.

கிரிக்கெட் வீரர்கள்தான் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவார்கள். மற்ற விளையாட்டு வீரர்கள் ஓய்வு பற்றி உலகம் கவனம் கொள்ளாது. ஆனால் இவற்றிற்கு மாறாக ஒரு சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது. பல ஆண்டுகளாக மஞ்சு விரட்டு களத்தில் வீரர்களைப் பந்தாடிப் பல வெற்றிகளைப் பெற்று தந்த காளை ஒன்றுக்குக் கள ஓய்வு விழா எடுத்து அசத்தியிருக்கிறார் அதன் உரிமையாளர்.

காளைக்கு மரியாதை செய்யும் மக்கள்
காளைக்கு மரியாதை செய்யும் மக்கள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மஞ்சுவிரட்டுக்குப் பெயர் போன மண் சிவகங்கை. நாட்டு மாட்டு இனத்தை அழியாமல் காப்பாற்றும் சிவகங்கை மாவட்டத்தில் காளைகளைத் தங்கள் பிள்ளைகளாகவே விரும்பி வளர்க்கிறார்கள். அதிலும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டில் கலந்துகொள்ளும் மாடுகளுக்கு ராஜ மரியாதைதான். தீவனம் முதல் தங்கும் இடம்வரை பார்த்துப் பார்த்துக் கவனிக்கும் பாசக்கார மக்கள் சிவகங்கையின் தனிச்சிறப்பு.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்தவர் ஜெயந்தன். ஒரு காளைக்கு `சேவுகா' என்று பெயரிட்டு 15 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். மஞ்சு விரட்டு களத்தில் `சேவுகா' பெற்ற வெற்றிகள் ஏராளம் என்கிறார்கள். களத்தில் இறங்கியவுடன் களமாடும் வீரர்களின் தன்மைக்கு ஏற்ப விளையாடுமாம்.

காளைக்கு மரியாதை செய்யும் மக்கள்
காளைக்கு மரியாதை செய்யும் மக்கள்

வீராதி வீரராக இருந்தாலும் ஆட்டம் காட்டிவிட்டுத் தப்பிவிடுமாம். பல ஆண்டுகளாகக் களமாடிய சேவுகாவுக்கு வயது மூப்பு காரணமாக மஞ்சுவிரட்டிலிருந்து ஓய்வு கொடுத்திருக்கிறார். சேவுகாவை நன்றாக அலங்கரித்து, வணங்கி உரிய மரியாதையுடன் கம்பீரமாக ஊர்வலம் அழைத்துச் சென்று, அதனை ஒருவிழாவாகக் கொண்டாடி காளையைக் கெளரவபடுத்தியிருக்கிறார்.

இப்படியொரு விழா எடுத்ததற்கான காரணம்குறித்து ஜெயந்தனிடம் கேட்டோம். ``எங்க குடும்பம் விவசாயம் சார்ந்த குடும்பம். எங்களோட அடையாளமே நாங்க வளர்க்குற மாடுகள்தான். ஜோடி மாடு, ரேஸ் மாடு, ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு காளைகள்னு பல மாடுகளை வளர்த்துகிட்டு வர்றோம். எங்களோட காளைகள், எங்க குடும்பத்தில ஒருத்தர் மாதிரிதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாங்கள் வளர்த்து இறந்த மாடுகளோட போட்டோக்களை இன்னிக்கும் எங்க வீட்டுல வெச்சு, கும்பிட்டுகிட்டு இருக்கோம். மாடுகளுக்குப் பேரு வைக்கும்போது கூடப் பிள்ளைகளுக்கு வைக்கிற மாதிரியே, வாங்குன நேரம், காலம், அதோட உடல்வாகு எல்லாத்தையும் கணக்குப்போட்டுத்தான் பெயர் வெப்போம்.

இப்ப நாங்க விழா எடுத்த சேவுகா காளை எங்களுக்குப் பல பெருமைகளைத் தேடிக்கொடுத்த காளை. அதுக்கு இப்ப வயசாகிடுச்சு. நம்ம வீட்டுல வயசானங்களை வேலைக்கு அனுப்பாம ஓய்வுகொடுக்குறோம்ல, அதுமாதிரிதான். எங்க வீட்டுல ஒருத்தரான சேவுகாவுக்கும் இப்ப ஓய்வு தேவைப்படுது. அதை இனிமே மஞ்சு விரட்டுல இறக்காம, அதோட முதுமை காலத்தை நிம்மதியா கழிக்கணும். இதுவரைக்கும் எங்களுக்குப் பல பெருமை தேடித்தந்த காளைக்கு, பெருமை சேர்க்குறதுக்காக அதுக்கு உரிய மரியாதைக் கொடுத்து, அதை ஓய்வெடுக்க வைக்கலாம்னு நினைச்சோம். அதுனால அதை ஒரு விழாவா கொண்டாடுனோம்" என்றார் பெருமையுடன்.

காளைக்கு மரியாதை செய்யும் மக்கள்
காளைக்கு மரியாதை செய்யும் மக்கள்

அலுவலகத்தில் வேலை பார்த்தவர்கள் ஓய்வுபெறும்போது அலுவலகமே `பிரிவு உபசார விழா' நடத்துவது போல், மஞ்சுவிரட்டிலிருந்து ஓய்வு பெறும் காளைக்கு `களம் ஓய்வு விழா' நடத்தியது பலரது பாராட்டைப் பெற்றுள்ளது.

- செ. சுபஸ்ரீ. மாணவ நிருபர்.