Published:Updated:

பாம்பா, பாசமா... நாய்க்குட்டிகளைப் பாதுகாத்த நல்ல பாம்பு; ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

பாம்பு

பொது மக்கள் யாரையும் குட்டி நாய்களைத் தொட பாம்பு அனுமதிக்கவில்லை. அதோடு சிறிது நேரத்தில் அவ்விடம் வந்த தாய் நாயையும் பாம்பு அனுமதிக்கவில்லை. படமெடுத்த நிலையிலேயே இருந்துள்ளது.

பாம்பா, பாசமா... நாய்க்குட்டிகளைப் பாதுகாத்த நல்ல பாம்பு; ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

பொது மக்கள் யாரையும் குட்டி நாய்களைத் தொட பாம்பு அனுமதிக்கவில்லை. அதோடு சிறிது நேரத்தில் அவ்விடம் வந்த தாய் நாயையும் பாம்பு அனுமதிக்கவில்லை. படமெடுத்த நிலையிலேயே இருந்துள்ளது.

Published:Updated:
பாம்பு

சில நேரங்களில் நாய்க்குட்டிக்கு ஆடு பால் கொடுக்கும் சம்பவங்ளையும், பூனைக் குட்டிக்கு நாய் தன் குட்டிகளோடு சேர்த்து இடமளிக்கும் சம்பவங்களையும் கேள்விப்பட்டிருப்போம். தாய்மையின் நிலையில் வேறு உயிரினத்தையும், தன்னுடைய குட்டிகளோடு சேர்த்து அரவணைத்துக்கொள்ளும் விலங்கினங்களின் செயல்களை அவ்வப்போது செய்திகளாக நாம் கேள்விப்படுதுண்டு. 

Animal love
Animal love
pixabay

ஆனால், பாம்பு ஒன்று நாய்க்குட்டிகளைப் பாதுகாத்தது என்று சொன்னால் நம்புவீர்களா? கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகில் உள்ள பாலூர் பகுதியைச் சேர்ந்தவர்தான் சம்பத். இவர் புதிதாக வீடு கட்டி வந்தநிலையில், அப்பகுதியில் சிறிய பள்ளம் ஒன்றைத் தோண்டியுள்ளார்.

பாம்பு
பாம்பு

அந்தப் பள்ளத்தில் நாய் ஒன்று 3 குட்டிகளை ஈன்றுள்ளது. குட்டிகளை ஈன்றுவிட்டு, உணவுக்காக தாய் நாய் வெளியே சென்றுள்ளது. அந்தச் சமயத்தில்தான் அந்தப் பக்கமாக ஊர்ந்து சென்றுகொண்டிருந்த நல்ல பாம்பு ஒன்று, அந்த நாய்க்குட்டிகளுடன் நின்றுகொண்டது. 

நல்ல பாம்பால் நாய்க்குட்டிகளுக்கு ஏதேனும் ஆபத்து நேருமோ என அப்பகுதி மக்கள் பதறிப் போய் இருக்கின்றனர். ஆனால், பொது மக்கள் யாரையும் குட்டி நாய்களைத் தொட பாம்பு அனுமதிக்கவில்லை. அதோடு சிறிது நேரத்தில் அவ்விடம் வந்த தாய் நாயையும் பாம்பு அனுமதிக்கவில்லை. படமெடுத்த நிலையிலேயே இருந்துள்ளது.

பாம்பு பிடித்தல்
பாம்பு பிடித்தல்

இதைத் தொடர்ந்து கடலூர் வனத்துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து அவ்விடத்துக்கு வந்த வன அலுவலர்கள் உடனடியாக பாம்பை அந்த இடத்திலிருந்து அகற்றி, பாதுகாப்பான இடத்தில் விட்டனர். நல்ல பாம்பு நாய்களைக் காத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.