Published:Updated:

`தனி அடையாளமா இருந்தது; இனி புள்ளிமான்களை இங்கு பார்க்க முடியாது!'- ஏக்கத்தில் தஞ்சாவூர் மக்கள்

கு. ராமகிருஷ்ணன்
ம.அரவிந்த்

தற்பொழுது இங்கு 41 புள்ளிமான்கள் உள்ளன. நகர்ப்புறத்தில், அதுவும் தஞ்சை நகரின் மையப்பகுதியில் புள்ளிமான்களைப் பார்க்கக்கூடிய வாய்ப்பு என்பது மிகவும் அரிதானது. வேறு எங்கும் பெரும்பாலும் நகர்ப்புற பூங்காவில் இந்தளவுக்கு அதிக எண்ணிக்கையில் புள்ளிமான்களைப் பார்க்க முடியாது.

புள்ளிமான்கள் -தஞ்சை சிவகங்கை பூங்கா
புள்ளிமான்கள் -தஞ்சை சிவகங்கை பூங்கா

தஞ்சாவூரில் உள்ள சிவகங்கை பூங்காவில் உள்ள புள்ளிமான்கள் தமிழ்நாடு அளவில் மிகவும் பிரபலம். இந்தப் புள்ளிமான்களை பார்ப்பதற்காகவே, பல்வேறு மாவட்டங்களிலிருந்து பள்ளி மாணவர்களும் சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் வந்து செல்வார்கள். இந்நிலையில் இங்குள்ள புள்ளிமான்களை கோடியக்கரை வனப்பகுதிக்குக் கொண்டு போய் விடுவதற்கான ஏற்பாடுகள் தற்பொழுது தீவிரமாக நடந்து வருகின்றன. இது, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல தரப்பினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தஞ்சையில் உள்ள சிவகங்கை பூங்கா
தஞ்சையில் உள்ள சிவகங்கை பூங்கா

தஞ்சாவூரில் உள்ள சிவகங்கை பூங்காவில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான புள்ளிமான்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இது மட்டுமல்லாமல், நரி, முள்ளம்பன்றி, புணுகு பூனை, கரடி உள்ளிட்ட இன்னும் பல வன விலங்குகள் இங்கு வளர்க்கப்பட்டு வந்தன. கிளி, முயல், புறா உள்ளிட்ட மேலும் பல உயிரினங்கள் இங்கு வளர்க்கப்பட்டன. இவற்றைக் காண ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்து செல்வார்கள்.

`இந்த மாசம் மட்டும் ஒன்பது மான்கள் இறந்துடுச்சு!' - இது சிவரக்கோட்டை சோகம்

குறிப்பாக கல்வி சுற்றுலாவிற்கு வரக்கூடிய மாணவர்களுக்கு இது மிகவும் அரிய காட்சியாக விளங்கி வந்தது. இங்கிருந்த பல உயிரினங்கள் காலப்போக்கில் மாயமான நிலையில் புள்ளி மான்கள் உள்ளிட்ட ஒருசில உயிரினங்கள் மட்டுமே சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தின. தற்பொழுது இங்கு 41 புள்ளிமான்கள் உள்ளன. நகர்ப்புறத்தில், அதுவும் தஞ்சை நகரின் மையப்பகுதியில் புள்ளிமான்களைப் பார்க்கக்கூடிய வாய்ப்பு என்பது மிகவும் அரிதானது. வேறு எங்கும் பெரும்பாலும் நகர்ப்புற பூங்காவில் இந்தளவுக்கு அதிக எண்ணிக்கையில் புள்ளிமான்களைப் பார்க்க முடியாது.

புள்ளிமான்கள்
புள்ளிமான்கள்

இந்நிலையில்தான் தஞ்சை மாநகரம் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்படுவதால், இங்குள்ள புளிமான்களை கோடியக்கரை சரணாலயத்தில் கொண்டுவிட, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்படி, நகர்ப்புற பகுதியில் வனவிலங்குகளை பராமரிக்கக் கூடாது என விதிமுறை இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். கோடியக்கரை வனப்பகுதியில் நிரந்தரமாக விட்டுவிட்டால், அங்கு புள்ளிமான்கள் சுதந்திரமாக ஓடி திரிந்து விளையாடும். தஞ்சை மக்கள் இதை ஒருபுறம் புரிந்து கொண்டாலும்கூட, மனதளவில் இதை ஏற்க முடியாமல் ஏக்கத்தில் தவிக்கிறார்கள். தஞ்சை சிவகங்கை பூங்காவின் தனி அடையாளமாக இந்தப் புள்ளிமான்கள் விளங்கின. இவை அழகாக துள்ளிக் குதித்து விளையாடுவதைப் பார்த்து, குழந்தைகள் உற்சாகமடைந்து ஆரவாரம் செய்வார்கள். இவை இல்லாத பூங்காவை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை'' என ஏக்கத்தோடு பேசுகிறார்கள் தஞ்சை மக்கள்.