Published:Updated:

கால்நடைகளை வேட்டையாடிய புலி! கூண்டில் சிக்கியது எப்படி?

கூண்டில் சிக்கிய புலி

அந்தப் புலி கால்நடைகளைத் தொடர்ந்து தாக்கி வந்தது. புலியை கண்காணிக்க தானியங்கி கேமராக்களைப் பொருத்தினர். இதன் மூலம் புலி நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது. வேட்டைத்திறன் குறைந்து கால்நடைகளைத் தாக்கி வந்த அந்தப் புலியை உயிருடன் பிடிக்கும் சவாலான பணியில் இறங்கினர்.

கால்நடைகளை வேட்டையாடிய புலி! கூண்டில் சிக்கியது எப்படி?

அந்தப் புலி கால்நடைகளைத் தொடர்ந்து தாக்கி வந்தது. புலியை கண்காணிக்க தானியங்கி கேமராக்களைப் பொருத்தினர். இதன் மூலம் புலி நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது. வேட்டைத்திறன் குறைந்து கால்நடைகளைத் தாக்கி வந்த அந்தப் புலியை உயிருடன் பிடிக்கும் சவாலான பணியில் இறங்கினர்.

Published:Updated:
கூண்டில் சிக்கிய புலி

வனங்கள் அடர்ந்தப் பகுதியாக கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டம் இருந்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியே வரும் வனவிலங்குகள், குடியிருப்பு பகுதிகளை நோக்கி நகர்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், வயநாடு மாவட்டத்தில் உள்ள சீரால் குடியிருப்பு பகுதியில் கடந்த மாதம் புலி ஒன்று கால்நடைகளைத் தாக்கி வருவதாக வனத்துறைக்கு மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். வனத்துறையினர் புலியைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்தப் புலி கால்நடைகளைத் தொடர்ந்து தாக்கி வந்தது. புலியைக் கண்காணிக்க தானியங்கி கேமராக்களை பொருத்தினர். இதன் மூலம் புலி நடமாட்டம் உறுதி செய்யப் பட்டது. வேட்டைத் திறன் குறைந்து கால்நடைகளைத் தாக்கி வந்த அந்தப் புலியை உயிருடன் பிடிக்கும் சவாலான பணியில் இறங்கினர்.

கூண்டில் சிக்கிய புலி
கூண்டில் சிக்கிய புலி

கண்காணிப்பு கேமராக்கள், கூண்டுகள், கும்கி யானைகள், கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் புலியை உயிருடன் பிடிக்க ஏராளமான வனத்துறை பணியாளர்கள் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாகத் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், இன்று அதிகாலை சீரால் பகுதிக்கு வந்த அந்தப் புலி, வனத்துறையால் அமைக்கப்பட்டிருந்த கூண்டில் சிக்கியது.

இது குறித்து கேரள வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ``கடந்த ஒரு மாதத்தில் 10-க்கும் அதிகமான ஆடு, மாடுகளைத் தாக்கியிருக்கிறது. வனவிலங்குகளை வேட்டையாடுவதில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதினோம். இன்று அதிகாலை கூண்டுக்குள்‌ பயங்கர உறுமல் சத்தம் கேட்டது. சென்று பார்த்தபோது உள்ளே புலி இருந்தது. உடனடியாக உடல்நிலையை பரிசோதித்தோம். சுல்தான் பத்தேரியில் உள்ள வனவிலங்குகள் காப்பு மையத்தில் வைத்து பராமரித்து வருகிறோம். புலியின் வயது மற்றும் பாலினம் பின்னர் தெரிவிக்கப்படும். உடலில் காயங்கள் இருக்கிறதா என பரிசோதனை செய்து வருகின்றனர். காட்டில் விடுவிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது" என்றனர்.