Published:Updated:

விபத்தில் சிக்கி காயமடைந்த மாடு; ஊரடங்கு நாளிலும் விரைந்து வந்து சிகிச்சையளித்த கால்நடை ஆம்புலன்ஸ்!

கால்நடை ஆம்புலன்ஸ்!

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் விபத்தில் கொம்பு உடைந்த மாட்டுக்கு மருத்துவ குழுவினர்கள் விரைந்து வந்து சிகிச்சை அளித்தனர்.

விபத்தில் சிக்கி காயமடைந்த மாடு; ஊரடங்கு நாளிலும் விரைந்து வந்து சிகிச்சையளித்த கால்நடை ஆம்புலன்ஸ்!

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் விபத்தில் கொம்பு உடைந்த மாட்டுக்கு மருத்துவ குழுவினர்கள் விரைந்து வந்து சிகிச்சை அளித்தனர்.

Published:Updated:
கால்நடை ஆம்புலன்ஸ்!

முழு ஊரடங்கு மற்றும் காணும் பொங்கல் அரசு விடுமுறையையும் பொருட்படுத்தாமல் விபத்தில் சிக்கி கொம்பு உடைந்த மாட்டுக்கு, கால்நடை மருத்துவர்கள் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனத்தில் வந்து சிகிச்சை அளித்துக் காப்பாற்றிய செயல் பாராட்டைப் பெற்றுள்ளது.

விபத்தில் சிக்கிய மாட்டுக்கு சிகிச்சை
விபத்தில் சிக்கிய மாட்டுக்கு சிகிச்சை

தமிழ்நாட்டில் கால்நடைகள் அவ்வப்போது பல்வேறு நோய் தாக்குதல்களுக்கு ஆளாகி அவதிப்படுகின்றன. நடமாட இயலாத கால்நடைகளை வாகனங்கள் மூலம் மருத்துவமனைகளுக்கு கொண்டுச் செல்ல முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு அதி நவீன வசதிகளுடன் கூடிய இலவச நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் வாகன சேவையை, 22 மாவட்டங்களில் கடந்த அ.தி.மு.க அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அறிமுகப்படுத்தியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த வாகனத்தில் கால்நடைகள் சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள், நவீன கருவிகள், ரத்தம், சிறுநீா் மூலம் நோய் கண்டறியும் சிறிய அளவிலான லேப் வசதி உள்ளிட்டவை இருக்கின்றன. மேலும், ஆம்புலன்ஸ் செல்ல முடியாத இடங்களிலிருந்து கால்நடைகளை அழைத்து வரும் வகையில் நவீன தள்ளுவண்டி, ஹைட்ராலிக் லிஃப்ட் மற்றும் இரவு நேரங்களில் சிகிச்சை அளிக்க வசதியாக அதிக ஒளியுள்ள மின் விளக்குகளுடன் கூடிய ஜெனரேட்டா் உள்ளிட்ட வசதிகளுடன் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் ஒரு மருத்துவா், உதவியாளா், ஓட்டுநா் என மூன்று போ் பணியாற்றுகின்றனர். `1962' என்ற எண்ணை அழைத்தால்  கால்நடை இருக்கும் இடத்துக்கே  இந்த வாகனம் நேரடியாக சென்று  மருத்துவ சேவை அளிக்கும்.

ஊரடங்கு நாளிலும் உதவிய 1962
ஊரடங்கு நாளிலும் உதவிய 1962

இந்த சேவை  முழு ஊரடங்கு உத்தரவு மற்றும் காணும் பொங்கல் அரசு விடுமுறை தினமான நேற்று, மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் விபத்தில் கொம்பு உடைந்த மாட்டுக்கு மருத்துவ குழுவினர்கள் விரைந்து வந்து சிகிச்சை அளித்தனர். இதனை அந்த பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அந்த கிராமத்தினர், ``மாவட்டத்திற்கு ஒரு கால்நடை மருத்துவ வாகனம் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் கடந்தாண்டு நாகப்பட்டினத்திலிருந்து பிரிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்திற்கென தனி வாகனம் இல்லை. இதனால் நாகப்பட்டினத்திலிருந்து அவசர உதவி தேவைப்படும்  நேரத்தில் இந்த மருத்துவ வாகனம் வருவதில் சிக்கல் உள்ளது. எனவே மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தனி கால்நடை மருத்துவ வாகனத்தை  அரசு ஏற்படுத்தி, விவசாயிகளின் உற்ற நண்பனான கால்நடைகளை பாதுகாக்க உதவ வேண்டும்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism