Published:Updated:

தாயைப் பிரிந்த ஆட்டுக்குட்டி; தாயுள்ளத்துடன் பாலூட்டும் நாய்; நெகிழ வைத்த சம்பவம்!

ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்
News
ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்

`` `ஆட்டுக்குட்டிக்கு நாய் பால் கொடுக்கும் அதிசயம்’னு டி.வியில பார்த்திருக்கேன். ஆனா, எங்க வீட்டுலயே அந்த அதிசயம் நடக்குறதைப் பார்த்து சந்தோஷமா இருக்கு. 'ம்மே..'னு ஆட்டுக்குட்டி கத்தினா, அடுத்த நொடியே பாய்ந்து ஓடி அது பக்கத்துல போகுது என் செல்ல நாய்."

தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூர் அருகேயுள்ள வானரமுட்டியைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி. ஒப்பந்த அடிப்படையில் கட்டட வேலைகளை எடுத்து செய்து வரும் இவர், தனது வீட்டில் `கிட்டியம்மாள்’ என்ற பெண் நாயை கடந்த ஒன்றரை ஆண்டாக வளர்த்து வருகிறார். வீட்டில் உள்ள ஒரு நபரைப் போலவே கிட்டியம்மாளை வளர்த்து வந்தார் பெருமாள்சாமி. கருவுற்றிருந்த கிட்டியம்மாள், கடந்த சில நாள்களுக்கு முன் 6 குட்டிகளை ஈன்றுள்ளது. பெருமாள், அந்த 6 குட்டிகளையும் தன் நண்பர்களிடம் வளர்ப்பிற்காகக் கொடுத்துவிட்டார்.

நாயுடன் பெருமாள்சாமி
நாயுடன் பெருமாள்சாமி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதற்கிடையில், தென்காசி அருகேயுள்ள மேலப்பாவூரில் உள்ள பெருமாள்சாமியின் மூத்த மகள் இலக்கியாவின் வீட்டில் உள்ள ஒரு பெட்டை ஆடு 4 குட்டிகளை ஈன்றுள்ளது. அதில் ஒரு குட்டியை இலக்கியா, வளர்ப்பிற்காக தன் தந்தை பெருமாள்சாமியிடம் கொடுத்துள்ளார். பெருமாள்சாமி தனது வீட்டில் வைத்து அந்த ஆட்டுக்குட்டியை வளர்த்து வருகிறார். அந்த ஆட்டுக்குட்டிக்கு `கருப்பாயி’ எனப் பெயர் வைத்துள்ளார். கிட்டியம்மாளிடம், கருப்பாயி நன்கு பழகி வந்தது.

இந்த நிலையில், கருப்பாயிக்கு பசி எடுத்ததும் கிட்டியம்மாள் பால் கொடுத்து வருவதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார் பெருமாள்சாமி. தாயில்லாத ஆட்டுக்குட்டியை தனது பிள்ளையாக நினைத்து பால் கொடுத்து வரும் நாயைக் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து வருகின்றனர்.

``என் மகள் வீட்டுல இருந்து வளர்ப்புக்காக இந்த ஆட்டுக்குட்டிய தூக்கிட்டு வந்தேன். ராத்திரி முழுக்க `ம்மே.. ம்மே..'னு தாயைத் தேடி கத்திக்கிட்டே இருந்துச்சு.

நாயிடம் பால் குடிக்கும் ஆட்டுக்குட்டி
நாயிடம் பால் குடிக்கும் ஆட்டுக்குட்டி

பால் புட்டியில பசும்பாலை அடைச்சுக் கொடுத்தும் குடிக்கலை. என்னோட வளர்ப்புநாய் கிட்டியம்மாள், 6 குட்டி போட்டுச்சு. வளர்ப்புக்காக நண்பர்கள் கேட்டதுனால கொடுத்தேன். இந்த நிலையில ஒரு நாள் ஆட்டுக்குட்டி கருப்பாயி, கிட்டியம்மாகிட்ட பிள்ளையாப் பழகி பால் குடிக்க ஆரம்பிச்சது. இதைப் பார்த்த சந்தோஷத்துல, ஆட்டுக்குட்டிக்கு நாய் பால் கொடுக்கும் போது அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்கள்ல பதிவிட்டோம். அந்தக் காட்சியைப் பார்க்கவே எங்களுக்கு ரொம்ப நெகிழ்ச்சியா இருந்துச்சு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆட்டுக்குட்டியை அன்போடு முகர்வது, விளையாடுறதுன்னு பாசமா பழகிட்டு வருது. `ஆட்டுக்குட்டிக்கு நாய் பால் கொடுக்கும் அதிசயம்’னு டி.வியில பார்த்திருக்கேன். ஆனா, எங்க வீட்டுலயே அந்த அதிசயம் நடக்குறதைப் பார்த்து சந்தோஷமா இருக்கு. 'ம்மே..'னு ஆட்டுக்குட்டி கத்தினா, அடுத்த நொடியே பாய்ந்து ஓடி அது பக்கத்துல போகுது என் செல்ல நாய்.

பெருமாள்சாமி
பெருமாள்சாமி

ஆட்டுக்குட்டிக்கு நாய் பால் கொடுப்பதால பிரச்னை எதுவும் வருமானு முதல்ல பயந்தோம். கால்நடை மருத்துவர்கிட்ட கேட்டப்போ, எந்தப் பிரச்னையும் கிடையாதுனு சொல்லிட்டார்” என்றார் பெருமாள்சாமி.

நாய் நன்றியுள்ளது என்பதைத் தாண்டி, தாயுள்ளம் கொண்ட நாய், ஆட்டுக்குட்டிக்குப் பால் கொடுப்பதை அப்பகுதியினர் ஆச்சர்யமாகப் பார்த்துச் செல்கிறார்கள்.