Published:Updated:

`இது அதுல்ல' - நதியில் பாய்ந்து நீந்தும் புலி வைரலாகும் வீடியோ; நெட்டிசன்களின் கமென்ட்!|Video

புலி

மீட்புக்குழுவினர் படகில் இருந்து செல்லும் புலி, திரும்பிப் பார்க்கவே இல்லை என்பதை கவனித்து கமென்ட் செய்திருக்கிறார் ஒரு பதிவர்.

`இது அதுல்ல' - நதியில் பாய்ந்து நீந்தும் புலி வைரலாகும் வீடியோ; நெட்டிசன்களின் கமென்ட்!|Video

மீட்புக்குழுவினர் படகில் இருந்து செல்லும் புலி, திரும்பிப் பார்க்கவே இல்லை என்பதை கவனித்து கமென்ட் செய்திருக்கிறார் ஒரு பதிவர்.

Published:Updated:
புலி

`இது அதுல்ல' என்கிற ரீதியில் நெட்டிசன்கள் கமென்ட் செய்துவரும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல். இந்திய வனத்துறை அதிகாரியான பர்வீன் கஸ்வான் பகிர்ந்திருக்கிற அந்த வீடியோவில் மீட்புப்படையினர், புலி ஒன்றை அதன் வாழ்விடத்துக்கே திரும்பி அனுப்பும் காட்சி இடம்பெற்றிருக்கிறது. படகில் இருந்து தாவி குதிக்கும் புலி, கடலில் மிதந்து மீண்டும் தன்னுடைய இயற்கை வாழ்விடத்துக்கு திரும்பும் காட்சி பலருக்கும் life of pie படத்தில் வரும் புலியை நினைவுப்படுத்தி இருக்கிறது.

ரிச்சர்ட் பார்க்கர் என்று பெயரிடப்பட்ட புலியுடன் நடுக்கடலில் மாட்டிக்கொள்ளும் சிறுவனின் கதையைச் சொன்ன படம் லைப் ஆப் பை. 227 நாட்களுக்கு மேலாக புலியும் சிறுவனுமாக நடுக்கடலில் சந்திக்கும் பிரச்னைகளை சுவாரசியமாக பேசிய life of pie படம் 4 ஆஸ்கர் விருதுகளை வென்றது.

லைப் ஆப் பை
லைப் ஆப் பை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்த படத்தின் இறுதிக் காட்சியில் கரையை அடையும்போது ரிச்சர்ட் பார்க்கர் அந்த சிறுவனை திரும்பிக்கூட பார்க்காது போய்விடும். அதேபோலவே மீட்புக்குழுவினர் படகில் இருந்து செல்லும் புலி திரும்பி பார்க்கவே இல்லை என்பதை கவனித்து கமென்ட் செய்திருக்கிறார் ஒரு பதிவர்.

சுந்தரவனக்காடுகள் மேற்கு வங்கத்துக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் விரிந்திருக்கும் அலையாத்தி காடுகள். வங்கப்புலிகளுக்கு இயற்கை வாழ்விடமாக இருக்கும் இந்த காடுகள் கங்கையின் கழிமுகத்தில் அமைந்திருக்கிறது. கம்பீரமாக நீருக்குள் பாய்ந்து செல்லும் புலி காண்பவர்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை. பர்வீன் இதனை பழைய மீட்பு காணொலி என்கிற கேப்ஷனோடு பகிர்ந்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism