Published:Updated:

மலேசிய நாய்க்குட்டிக்கு அரிய வகை நோய்! -அறுவை சிகிச்சைக்கு வீடியோ காலில் இணைந்த கேரள மருத்துவர்கள்

Miniature Pinscher
Miniature Pinscher

மலேசியாவில் நோயால் அவதிப்பட்ட 2 மாத நாய்க்குட்டிக்கு நடத்தப்பட்ட அரிதான அறுவைசிகிச்சைக்கு வயநாடு மருத்துவர்கள் வீடியோ கால் மூலம் வழிகாட்டுதல் செய்த சம்பவம் பாராட்டைப் பெற்றுவருகிறது.

பிறந்து இரண்டு மாதமே ஆன 800 கிராம் எடை கொண்ட [Miniature Pinscher ] சிறிய ரக நாய்க்குட்டி ஒன்று, நோய் பாதிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டுவந்துள்ளது.

Miniature Pinscher
Miniature Pinscher

வாஸ்குலர் ரிங் அனாமலி என்ற மரபு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்த கால்நடை மருத்துவர்கள், அந்த குட்டிக்கு அறுவைசிகிச்சை செய்ய முடிவுசெய்துள்ளனர் .

அரிதான இந்த அறுவைசிகிச்சையை மலேசியாவில் பணியாற்றும் கேரளவைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் ஷிபு, இந்த முயற்சியை கேரளா மாநிலம் வயநாடு மருத்துவர்கள் உதவியுடன் முன்னெடுத்தார்.

Miniature Pinscher
Miniature Pinscher

இந்த அரிய அறுவைசிகிச்சையில், கேரள பூக்கோடு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சூரியாதாஸ், ஜெனிஸ்குமார், ஜிஷா ஆகியோர் டெலி மெடிசன் மீடியா எனப்படும் வீடியோ காலில் இணைந்து அறுவைசிகிச்சைக்கு வழிகாட்டி உதவினர்.

வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த இந்த சிகிச்சைக்குப் பின், 24 மணி நேரத்தில் நாய்க்குட்டியின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து உணவு உட்கொள்ளத் தொடங்கியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Miniature Pinscher
Miniature Pinscher

வழிகாட்டுதலில் ஈடுபட்ட கால்நடை மருத்துவக் குழுவினர் பேசுகையில், ``3 ஆயிரம் கி.மீ தொலைவுக்கு அப்பால், நோயால் தவித்த உலகின் சிறிய ரக நாய்குட்டிக்கு, வயநாட்டிலிருந்து உதவி செய்ய முடிந்த வாய்ப்பை பெருமையாக உணர்கிறோம். அந்த குட்டிநாய் குணமடைந்துவருவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" என்றனர்.

லாக்டௌன் சமயத்தில் நாய்க்குட்டியின் உயிரைக் காப்பாற்ற உதவிய வயநாடு கால்நடை மருத்துவர்களுக்கு உலகம் முழுக்க இருந்து பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.

அடுத்த கட்டுரைக்கு