Published:Updated:

சத்தியமங்கலம்; வனவிலங்குகள் கணக்கெடுப்பு டிச. 2 -ல் தொடக்கம்!

சத்தியமங்கலம் புலிகள் காப்பக நுழைவாயில்

முதலில் டிச. 2-ம் தேதி முதல் பெரிய தாவர உண்ணிகளான யானைகள், காட்டெருமை போன்றவையும், மாமிச உண்ணிகளான புலி, சிறுத்தை போன்றவற்றின் தடயங்களையும் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.

சத்தியமங்கலம்; வனவிலங்குகள் கணக்கெடுப்பு டிச. 2 -ல் தொடக்கம்!

முதலில் டிச. 2-ம் தேதி முதல் பெரிய தாவர உண்ணிகளான யானைகள், காட்டெருமை போன்றவையும், மாமிச உண்ணிகளான புலி, சிறுத்தை போன்றவற்றின் தடயங்களையும் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.

Published:Updated:
சத்தியமங்கலம் புலிகள் காப்பக நுழைவாயில்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 2022-ம் ஆண்டிற்கான மழைக்குப் பிந்திய வன உயிரின கணக்கெடுக்கும் பணிகள் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தொடங்கி வரும் டிசம்பர் 7-ந் தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் நடைபெற உள்ளது.
இதைத்தொடர்ந்து வரும் 10-ஆம் தேதி முதல் தானியங்கி புகைப்பட கருவிகளைக் கொண்டு புலிகள் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே விலங்குகள் கணக்கெடுக்கும் பணிகளை மேற்கொள்வதற்கு வசதியாக ஒவ்வொரு காவல் சுற்றுப்பகுதியில் உள்ள நேர்கோட்டுப் பாதைகள் சீரமைக்கப்பட்டும், தயார் நிலையில் வைத்திருக்கவும் வனச்சரக அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இளைபாறும் புலிகள்
இளைபாறும் புலிகள்

முதலில் டிச. 2-ம் தேதி முதல் பெரிய தாவர உண்ணிகளான யானைகள், காட்டெருமை போன்றவையும், மாமிச உண்ணிகளான புலி, சிறுத்தை போன்றவற்றின் தடயங்களையும் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.

டிசம்பர் 3-ம் தேதி நேர்கோட்டு பாதை கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. 4-ம்  தேதி பெரிய தாவர உண்ணிகள் மற்றும் மாமிச உண்ணிகளின் தடயங்கள் கணக்கெடுக்கப்படுகிறது.
5-ம் தேதி நேர்கோட்டு பாதை கணக்கெடுக்கும் பணியும், 6ஆம் தேதி மீண்டும் பெரிய தாவர உண்ணிகள் மற்றும் மாமிச உண்ணிகளின் தடயங்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.
7-ந் தேதி நேர்கோட்டு பாதை கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.

வன உயிரின கணக்கெடுப்பு பணியின் போது களப்பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை வனத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து வனத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
``வன உயிரின கணக்கெடுப்பு பணியின் போது களப்பணியாளர்கள் தங்களது பாதுகாப்பினை கருத்தில் கொண்டு துப்பாக்கியை கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும். களப்பணியாளர்கள் அவர்களுக்கு உரிய சீருடையில் களப்பணி ஆற்ற வேண்டும்.

சாலையைக் கடக்கும் யானைக்கூட்டம்
சாலையைக் கடக்கும் யானைக்கூட்டம்

வன உயிரின கணக்கெடுப்பு பணியின் போது ஓய்வெடுக்கும் இடம், உணவு அருந்த அமரும் இடம் பாதுகாப்பானதாக இருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். கணக்கெடுப்பு பணியின் போது அலைபேசிகளை உபயோகப்படுத்திக் கொண்டு நடந்து செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் வன உயிரினங்கள் அருகில் இருந்தால் அதனை நம்மால் உணர இயலாமல் பாதுகாப்பற்ற சூழ்நிலைகள் உருவாகிவிடும்.

மேலும் கணக்கெடுப்பு பணியின் போது களப்பணியாளர்கள் வாசனை திரவியங்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அத்துடன் களப்பணியாளர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதை தவிர்க்க வேண்டும்" என பல்வேறு நடைமுறைகள் வலியுறுத்தியுள்ளது.

புலிகள்
புலிகள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குநர் ரா.கிருபாசங்கர்  தலைமையில் சத்திய மங்கலம் வனச்சரகர் கே.ஆர் பழனிச்சாமி, உயிரியலாளர் சி.சக்திவேல் மற்றும் பண்ணாரி பிரிவு வனவர் ஆ.தீபக்குமார் ஆகியோரும், சத்தியமங்கலம், பவானிசாகர் விளாமுண்டி வனச்சரகங்களிருந்து 70-க்கும் மேற்பட்ட வனப் பணியாளர்களும் இந்த வன உயிரின கணக்கெடுப்பு பணியில் கலந்து கொள்ள உள்ளனர்.