Published:Updated:

``யானைகளின் வழித்தடத்தை மீட்காவிட்டால், மரபியல் சிக்கல் ஏற்படும்!" - எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

காடழிப்பு, நீர் நிலை ஆக்கிரமிப்பு, வழித்தட ஆக்கிரமிப்பு, அதிகரிக்கும் கட்டுமானங்கள், மின் வேலி, துப்பாக்கிச்சூடு, அவுட்டுக்காய் வாகனம் மற்றும் ரயில் மோதல் போன்ற பல காரணிகளால் யானைகள் நம் முன்னே சிதைத்து வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினமான யானைகள்தான் ஒரு காட்டின் வனவளக் குறியீடாக கருதப்படுகின்றன. அது மட்டுமல்லாது காட்டில் வாழும் எண்ணற்ற உயிரினங்களின் வழிகாட்டியாக இருந்துவரும் யானைகளே வனக்கொள்ளையிலிருந்து காட்டை காப்பாற்றும் காவலனாகவும் விளங்கி வருகிறது. காடழிப்பு, நீர் நிலை ஆக்கிரமிப்பு, வழித்தட ஆக்கிரமிப்பு, அதிகரிக்கும் கட்டுமானங்கள், மின் வேலி, துப்பாக்கிச்சூடு, அவுட்டுக்காய் வாகனம் மற்றும் ரயில் மோதல் போன்ற பல காரணிகளால் யானைகள் நம் முன்னே சிதைத்து வருகின்றன.

wild elephants
wild elephants
`காப்பாற்றப்பட வேண்டிய காட்டின் பேருயிர்கள்!' - யானைகள் தின சிறப்புப் பகிர்வு! #VisualStory

ஊருக்குள் நுழையும் யானைகளை விரட்டுகிறோம் என்ற பெயரில் கும்கிளை வைத்து விரட்டியடிப்பது மற்றும் பட்டாசுகளை யானையின் அருகில் வீசுவது போன்ற நிகழ்வுகள் சாதுவான யானைகளைக்கூட மூளை சமநிலையை இழக்கச் செய்து ஆக்ரோஷமாக மாற்றுகின்றன. இனப்பெருக்கத்துக்காக இடம் விட்டு இடம் பெயர முடியாமல் அருகில் உள்ள கூட்டத்திலேயே இனப்பெருக்கம் செய்வதால், எதிர்காலத்தில் பிறக்கும் யானைகளுக்கு மரபியல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூாியின் வன விலங்கு உயிாியல் துறை உதவி பேராசிாியா் ராமகிருஷ்ணன், ``உலகில் 13 நாடுகளில் சுமார் 45,000 முதல் 50,000 ஆசிய யானைகள் உள்ளன. அவற்றில் சுமார் 26,000 யானைகள் இந்தியாவில்தான் உள்ளன. அவற்றிலும் 50 சதவிகித யானைகள் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களை உள்ளடக்கிய நீலகிரி உயிர்சூழல் மண்டலத்தை வாழ்விடமாக கொண்டுள்ளன. உலக அளவில் ஒரே இடத்தில் ஆசிய யானைகள் அதிகம் வாழும் பகுதியாக இது விளங்கி வருகிறது. ஆரோக்கியமான ஒரு‌ யானை, நாளொன்றுக்கு சுமார் 200 கிலோ முதல் 250 கிலோ உணவை உட்கொள்கின்றன. 100 முதல் 150 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகின்றன.

விலங்கு உயிாியில் துறை உதவி பேராசிாியா் ராமகிருஷ்ணன்
விலங்கு உயிாியில் துறை உதவி பேராசிாியா் ராமகிருஷ்ணன்

இவை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதில்லையென்பதால் யானைகள் உணவு, தண்ணீர் மற்றும் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுக்கு 500 சதுர கிலோமீட்டர் முதல் 600 சதுர கிலோமீட்டர் தூரம் வரை இடம்பெயர்கின்றன. இந்த இடப்பெயர்வுக்கு யானைகள் பண்ணெடுங்காலமாக பயன்படுத்தி வரும் வழித்தடத்தையே பயன்படுத்துகின்றன. ஆனால், தற்போதைய சூழலில் யானைகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, வழித்தடங்கள் துண்டாடப்பட்டுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனால் யானைகள் வழித்தடம் மாறி ஊருக்குள் நுழைவது மற்றும் இடப்பெயர்வே தடைபடுகிறது. மனித - யானை எதிர்கொள்ளல்கள் ஏற்படுவதோடு, யானைகள் இணை சேர்வதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. அருகில் உள்ள கூட்டத்திலேயே இணை சேர்வதால் In Breading எனப்படும் உள் இனப்பெருக்கம் செய்கின்றன. இது அடுத்த தலைமுறையில் பிறக்கும் யானைகளுக்கு பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தி மரபியல் ரீதியிலான சிக்கலை உண்டாக்கும். எனவே யானைகள் பயன்படுத்தி வந்த வழித்தடங்களை மீட்பது ஒன்றே சரியான தீர்வாக அமையும்" என எச்சரிக்கிறார்.

wild elephants
wild elephants
உலக யானைகள் தினம்: குறைந்து வரும் கோயில் யானைகள்... காரணம் என்ன?

யானைகளின் இன்றைய நிலை குறித்து நம்மிடம் பேசிய கூடுகள் அமைப்பின் நிறுவனர் மற்றும் சூழலியல் செயற்பாட்டாளர் ஊட்டி சிவதாஸ், ``இயற்கை நமக்கு கொடுத்த கொடைகளில் மிகப்பெரியது இந்த யானைகள். இவற்றைக் காத்து அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்வதே நமது கடமை. ஆனால், மனிதர்களை எதிர்கொண்டு வாழ்வதே யானைகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. யானைகளின் வாழிடத்தை ஒட்டிய பகுதிகளில் நாம் செய்யும் சிறு தவறுகள் கூட பெரிய பாதிப்பை அவற்றுக்கு ஏற்படுத்தி வருகின்றன. யானைகள் வழித்தடம் மற்றும் வாழிட மீட்பில் எந்த சமரசமும் இருக்க கூடாது" என்றார் கடுமையாக.

இத்தகைய சிறப்புமிகு யானைகளைக் காக்க ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12-ம் தேதி உலக யானைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. யானைகள் தினம் கொண்டாடப்படும் இதே தினத்தில், யானைகளின் வழித்தடத்தையும் மீட்க குரல்கொடுக்க வேண்டும் என்பதே ஆய்வாளர்களின் குரலாக உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு