Published:Updated:

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

Published:Updated:
ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ன்பார்ந்த ஆனந்த விகடன் வாசகர்களுக்கு, தமிழருவி மணியனின் அன்பு வணக்கம்... 

உலகத்தில் முதன்முதலில் படைக்கப்பட்டது தாவர இனம். படைப்பில் இறைவன் இறுதியாகப் படைத்தது மனித இனம். முதலில் படைத்த தாவர இனத்துக்கும், இறுதியாகப் படைத்த மனித இனத்துக்கும் அற்புதமான ஓர் ஒற்றுமை இருக்கிறது. மண்ணில் விதையாக விழுந்த எந்தத் தாவரமும், விண்ணை நோக்கி நெடியதாக வளரும் தன்மைகொண்டது. அதேபோல்தான் மண்ணில் பிறந்த மனிதனும் பிறந்த நாள் முதல் இறக்கும் நாள் வரை, விண்ணை நோக்கி நிமிர்ந்து வாழக்கூடியவனாக இருக்கிறான். தாவரங்களும் மனிதர்களும் தவிர, மற்ற எந்தப் படைப்பும் குறுக்கில் மட்டுமே வளரக்கூடியவை. தாவரத்துக்கும் மனிதனுக்கும் இதுபோல இன்னும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. அவை என்னென்ன, அவை நமக்குச் சொல்லும் பாடம் என்ன?

2,500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த புத்தபிரான், மனித இனம் முறையாக வாழ்வதற்காக பல வாழ்வியல் உண்மைகளை வகுத்துச் சென்றார். அவர் வகுத்த அந்த வாழ்வியல் உண்மைகளை 'அங்குத்தர நிக்காயம்’ என்பார்கள். 'அங்குத்தர நிக்காயம்’ ஐந்து பேருண்மைகளை உணர்த்துகிறது.         1.உனக்கும் முதுமை வரும். 2. உனக்கும் நோய் வரும். 3. உனக்கும் மரணம் வரும். 4. உன் விருப்பத்துக்கு உரியவர்கள் பிரியும் காலம் ஒருநாள் கட்டாயம் வரும். 5. உன் செயலே உன் விளைவுகள். அவர் சொன்ன இந்த வாழ்வியல் உண்மைகளை இன்னும் விரிவாகத் தெரிந்துகொள்வோமா?

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

வாய் இருக்கிறது என்பதற்காக, வார்த்தைகளை முழங்கும் வல்லமை இருக்கிறது என்பதற்காக, நாம் பேசிக்கொண்டே இருக்கலாகாது. எதைப் பேசுகிறோம் என்பது மிக முக்கியம். எதைப் பேசாமல் இருக்க வேண்டும் என்பது அதைவிட முக்கியம். பேசுவதைவிடப் பேசாமல் இருப்பது மிகச் சிறந்த அறிவுடைமையின் அடையாளம். அதனால்தான் 'மௌனம்’ மகத்தான மொழி என்கிறார்கள்.

போதி தர்மர், ஒன்பது ஆண்டுகளாக தன் சீடர்களுக்கு மிகச் சிறந்த போதனைகளை வழங்கிய பின்னர், 'மௌனம்தான் ஞானம் பெறுவதற்கான முதல் வழி. மௌனம் குறித்து உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். மௌனம் என்பதை நீங்கள் எப்படி உணர்த்துவீர்கள்?’ எனக் கேட்டார். அதற்கு சீடர்கள் சொன்ன பதில்களும், போதி தர்மர் சொன்ன போதனைகளும் என்ன? சொல்கிறேன்... மௌனமாகக் கேளுங்கள்!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஒவ்வொரு மனிதனையும் பல பிரச்னைகள் சூழ்ந்திருக்கின்றன. பிரச்னைகளே இல்லாத வாழ்வு என்பது யாருக்கும் கிடையாது. ஆனால், மனிதன் முயன்றால் எல்லாவிதமான பிரச்னைகளில் இருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ள முடியும். அதற்கு ஒவ்வொரு மனிதனிடமும் ஆறு முக்கியப் பண்புகள் இருந்தால் போதும். அவை என்ன தெரியுமா?

18-06-15 முதல் 24-06-15 வரை 044-66802911என்ற எண்ணுக்கு அழையுங்கள். இயற்கை, மனிதனுக்குள் புதைத்த இயல்புகளை அறிவோம்... தெளிவோம்!

அன்புடன்,

தமிழருவி மணியன்.