Published:Updated:

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

விகடன் வாசகர்களுக்கு வணக்கம், நான் மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஷைலஜா பேசுகிறேன்...

நான் மொழிபெயர்த்த, கேரளாவின் மிக முக்கிய எழுத்தாளர் சிஹாபுதின் பொய்த்தும்கடவு எழுதிய 'சிலுவை’ சிறுகதை என்னை மிகவும் உலுக்கியது. அந்தக் கதை ஒரு பத்திரிகையாளரைப் பற்றியது. அவர் குடும்பமே கஷ்டத்தில் இருக்கும். அந்தப் பத்திரிகையாளரின் மகனுக்கு, பிறந்ததில் இருந்தே பேச்சு வராது. ஒருநாள், பத்திரிகையாளரின் மனைவி அவருக்கு நல்ல உணவு சமைத்து வைத்திருப்பார். 'இதற்கு பணம் ஏது?’ என மனைவியிடம் கேட்கும்போது 'நீங்க நம்ம பையன்கிட்ட கொடுத்துட்டுப் போனீங்களே...’ எனப் பதில் வரும். அவர் அப்படி எதுவும் கொடுக்கவில்லை என்பதால் குழம்புவார். மறுநாளும் இது தொடரும். அந்தப் பணம் எங்கே இருந்து வந்தது, இந்தக் கதை உணர்த்துவது என்ன?

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

சில ஆசிரியர்கள் பல்கலைக்கழகங்களில் அவர்கள் செய்யும் ஆய்வுகளுக்கான நூல்களைத் தேடி என் புத்தகக் கடைக்கு வருகிறார்கள். அவர்கள் மூத்த எழுத்தாளார் ஜெயகாந்தன் பற்றி ஆய்வு செய்கிறவர்கள். அவரது மொத்தப் படைப்புகளைப் படிக்கும் ஆர்வமோ, அர்ப்பணிப்போ இல்லாமல், அவர் எழுதிய ஒரு சில சிறுகதைகள், சில நாவல்கள், குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டும் இருக்கிறதா எனக் கேட்கிறார்கள். இவர்களால் எப்படி இலக்கியம், இசை, ஓவியம்... என எல்லாம் தெரிந்த ஒரு மாணவரை உருவாக்க முடியும்? இதை மாற்ற என்ன செய்யலாம்?

வாடகை கொடுக்க முடியாமல், சமீபத்தில் என் புத்தகக் கடையைக் காலி செய்தேன். புத்தக அலமாரிகளை எல்லாம் லாரியில் ஏற்றி அனுப்பிவிட்டு, மிகத் துயரத்தோடு நின்றிருந்தேன். கடை வாசலில் வழக்கமாகக் கடை போடும் கொய்யாப் பழத் தாத்தா வந்தார். 'ஏம்மா, வாடகைக்காகவா காலி பண்ற? எனக்கு டவுன்ல மூணு வீடு இருக்கு. பத்து வருஷத்துக்கு முன்னாடி மூவாயிரத்துக்கு வாடகைக்கு விட்டேன். இப்போவரைக்கும் அதுதான் குடுத்துட்டிருக்காங்க’ எனச் சொன்னார். 'ஏன் பத்து வருஷமா வாடகை ஏத்தலை?’ எனக் கேட்டதற்கு அவர் சொன்ன பதிலில் அவ்வளவு ஆச்சர்யம். அதைச் சொல்கிறேன்.

ஒரு நிகழ்ச்சியில் நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தபோது ஒரு சக்கர நாற்காலி என்னைக் கடந்துசென்றது. அதில் இருந்தவர் ப்ரீத்தி ஸ்ரீநிவாசன். எனக்கு அவருடன் நல்ல அறிமுகம் உண்டு. விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு இருந்த அவரை, ஒருநாள் கடல் அலை அடித்து, தூக்கி வீசியது. முதுகுத் தண்டு பாதிக்கப்பட்டு இடுப்புக்குக் கீழே உள்ள பகுதி செயல்படாமல் போய்விட்டது. ஆனால் விளையாட்டுத் துறையில் தான் செய்ய நினைத்த சாதனையை, தனது பேச்சால் சாதித்துக் கொண்டிருக்கிறார். அவரைப் பற்றிய ஆச்சர்யத் தகவல்கள் சொல்கிறேன்... கேளுங்கள்.  

30-7-15 முதல் 5-8-15 வரை 044-66802911 எண்ணுக்கு அழையுங்கள். பயனுள்ள தகவல்கள் தெரிந்துகொள்ளலாம்!

அன்புடன்,

கே.வி.ஷைலஜா.

அடுத்த கட்டுரைக்கு