Published:Updated:

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

விகடன் வாசகர்களுக்கு, சங்கரின் வணக்கம்...   

ஐ.ஏ.எஸ் அகாடமி நடத்துவதாலோ என்னவோ, என்னிடம் தங்கள் பிள்ளைகளின் கல்வி எதிர்காலம் குறித்தே பல பெற்றோர்கள் யோசனை கேட்கிறார்கள். அதிலும் 10-வது முடித்த மாணவர்களை 'ப்ளஸ் டூ’வில் மாநில/மாவட்ட ரேங்குகள் மற்றும் சென்டம் ரிசல்ட் குவித்த பள்ளிகளில் சேர்க்க அலைபாய்கிறார்கள் பெற்றோர்கள். இது தவறான அணுகுமுறை. 10-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவனை, இன்னும் நிறைய மார்க் குவிக்க வேண்டும் என வேறு பள்ளியில் ப்ளஸ் ஒன் சேர்த்தால் முன்பைவிட குறைந்த மதிப்பெண்களையே எடுப்பான். காரணம், அந்த மாணவனின் நண்பர்கள், ஆசிரியர்கள், பள்ளி, வகுப்புச் சூழல் என அனைத்துமே மாறும்.  இப்படிப் பல மாற்றங்களை அந்த மாணவனால் கிரகித்து, முன்பைவிட வேகமாகப் பயணிக்க முடியாது. இது தொடர்பாக இன்னும் விரிவாகப் பேசலாம்...

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதேபோல, 'கல்லூரியில் எந்த டிகிரி படித்தால் உடனே வேலை கிடைக்கும்’ எனவும் தொடர்ந்து விசாரிக்கிறார்கள். சில வருடங்களாக உச்சத்தில் இருந்த இன்ஜினீயரிங் மோகம் இப்போது குறைந்து இருக்கிறது. ஆனால், உண்மை என்னவென்றால் எந்தப் படிப்பைப் படித்தாலும் அந்தத் துறை சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனமும் பயிற்சியும் பெற்றால், வேலை நிச்சயம். அஞ்சல்வழிக் கல்வியில் படித்த ஒரு பெண், கூடவே சீன மொழியையும் படித்தார். சீன மொழி ஈர்க்க, அந்த மொழியில் இருந்து மொழியாக்கம் செய்யும் அளவுக்குப் படித்தார். இப்போது இந்தியாவில் இயங்கும் பல சீன நிறுவனங்களுக்கு, அலுவல் கடிதங்களை மொழிபெயர்த்துக் கொடுத்து லட்சங்களில் சம்பளம் பெறுகிறார். இது மிகச் சின்ன உதாரணம்.  இதுபோல ஆர்வம் உள்ள துறைகளில் தனித் திறமைகளை வளர்த்துக்கொண்டால், மகா மெகா நிறுவனங்களே தேடி வந்து மாணவர்களை அழைத்துச் செல்லும். அதுகுறித்து இன்னும் நிறையப் பேசலாம்.

வகுப்பில் மாணவர்கள் அமரும் வரிசையை வைத்தே ஓர் உளவியலைச் சொல்வார்கள். முதல் வரிசையில் அமர்ந்திருப்பவர்கள் பெரும்பாலும் ஊழியர்களாகவும், நடுவரிசையில் அமர்ந்திருப்பவர்கள் தொழில் அதிபர்களாகவும், கடைசி வரிசையில் அமர்ந்திருப்பவர்கள் அரசியல்வாதிகளாகவும் வருவார்கள் என்பார்கள். கேட்க வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், அந்த உளவியல் பின்னணி சுவாரஸ்யமானது. தெரிந்துகொள்வோமே!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

இந்தியாவிலேயே சுலபமான நடைமுறைகளைக் கொண்ட தேர்வு என்றால், அது ஐ.ஏ.எஸ் தேர்வுகள்தான். திறமையும் ஆர்வமும் இருந்தால், இளங்கலைப் பட்டம் முடித்தவர்களே அந்தத் தேர்வில் முத்திரை பதிக்கலாம். அப்படியும் சிலர் சிவில் சர்வீஸஸ் தேர்வுகளில் முதற்கட்டத் தேர்வில் தோல்வி அடைந்ததும், மனம் உடைந்துவிடுகிறார்கள். வெற்றியைக் காட்டிலும் தோல்விதான் அதிகம் பாடம் கற்றுக்கொடுக்கும். அந்தப் பாடம் என்ன எனத் தெரிந்துகொண்டால், அடுத்த முயற்சியில் இலக்கை நெருங்கலாம். அப்படி நான் என் மாணவர்களுக்குச் சொல்லும் சில பாடங்களைச் சொல்கிறேன்.

6-8-15 முதல் 12-8-15 வரை 044-66802911 எண்ணுக்கு அழையுங்கள். பல ரகசியங்களைத் தெரிந்துகொள்வோம்!

அன்புடன்,

சங்கர்.