Election bannerElection banner
Published:Updated:

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

விகடன் வாசகர்களுக்கு, குட்டி ரேவதியின் வணக்கம்... 

கடவுள் மறுப்பு மட்டும்தான் பகுத்தறிவு எனப் பெரும்பாலோர் நினைக்கிறார்கள். உண்மையில் இயற்கை, பிரபஞ்சம், விஞ்ஞானம் குறித்த அறிவுதான் பகுத்தறிவு; நாம் எந்த மாதிரியான சூழலில் வாழ்கிறோம், யாராக இருக்கிறோம் என்பது பற்றிய தெளிவுதான் பகுத்தறிவு. இந்தியச் சமூகத்தில் மூடநம்பிக்கை, சடங்கு, அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம், நல்ல நேரம், கெட்ட நேரம் என நேரத்தைக்கூடப் பகுத்துவைக்கிறார்கள். இதனாலேயே நமக்குள் இருக்கும் திறமையை வெளிக்காட்டத் தயங்கித் தடுமாறுகிறோம். இவற்றைக் கடந்துவருவது எப்படி? சொல்கிறேன்...

நம் உடல்தான் நமக்கு முதல் மூலதனம். இந்த முழு வாழ்வையும் அதன் மூலமே வாழ்கிறோம்; அனுபவிக்கிறோம்; புரிந்துகொள்கிறோம். ஆனால், நம் உடல் பற்றி அறிந்துவைத்திருப்பது ஒரு மருத்துவரின் வேலை என நினைத்து ஒதுங்கிக்கொள்கிறோம். அப்படி அல்ல, அது ஒவ்வொரு தனிமனிதனின் வேலை; கடமை. உடல் என்பதை ஒரு வாடகை வீட்டைப்போல பயன்படுத்துவதால்தான் ஆரோக்கியமான முதுமை என்பது பெரிய கேள்விக்குறியாக நம் முன்னே தொக்கி நிற்கிறது. பொக்கிஷமான இந்த உடலைப் பற்றி அறிவதன் மூலம், நாம் அடையும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

'மனிதனுக்கு அவசியம் எது?’ நாம் எந்தத் தேவைக்காகப் படைக்கப்பட்டிருக்கிறோம் என்பதைத் தெளிவாக உணர்வதே மிக அவசியம். பெரிய சாதனையாளர்கள், மாமனிதர்கள், சமூகத்துக்காகப் பணியாற்றியவர்கள் எல்லோரும் தாங்கள் படைக்கப்பட்ட நோக்கத்தை அறிந்தவர்களே. அதை அறிவது எப்படி, அதை நோக்கிப் பயணிப்பது எப்படி? பேசுவோம்.

பெண் சுதந்திரம் இங்கு இருக்கிறதா? வீடு, சமூகம், அலுவலகம் என ஒவ்வோர் இடத்துக்கும் தகுந்தாற்போல் பெண்கள் பொருந்திப்போக வேண்டியிருக்கிற அதேவேளையில், பல திறமைகளோடும் பணிபுரிய வேண்டியிருக்கிறது. அது மட்டும் அல்ல, அவர்கள் வாழ்வோடும் உலகத்தோடும் நிறையப் பயணிக்கவும் வேண்டும். அப்போதுதான் இந்த உலகம் எவ்வளவு பரந்தது, இங்கு தனக்கான ரோல் என்ன, தன் வாழ்க்கைக்குப் பின்னால் இருக்கும் அரசியல் என்ன, அதில் இருந்து எப்படித் தன்னைப் பலப்படுத்திக்கொள்வது என, பலவற்றையும் அவர்கள் அறிய முடியும். சமூகத்தில் பெண்கள் பற்றிய அடிப்படை மனோபாவத்தை எவ்வளவு மாற்றி அமைக்க வேண்டியிருக்கிறது என்பது பற்றி இன்னும் நிறையச் சொல்கிறேன்... கேளுங்கள்.

13-8-15 முதல் 19-8-15 வரை 044-66802911எண்ணுக்கு அழையுங்கள். அறிவார்த்தமாகப் பேசுவோம்.

அன்புடன்

குட்டி ரேவதி

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு